- Home
- Cinema
- மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த ஃப்ரீத்தா ஹரி – கணவருக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் வைரல்!
மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த ஃப்ரீத்தா ஹரி – கணவருக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் வைரல்!
Preetha Vijayakumar Varalakshmi Vratham : நடிகை ஃப்ரீத்தா தனது கணவர் ஹரிக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ப்ரீத்தா வரலட்சுமி விரத கொண்டாட்டம்,
சந்திப்போமா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஃப்ரீத்தா தர்மா, பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம், காக்கை சிறகினிலே, அல்லி அர்ஜூனா, புன்னகை தேசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
ப்ரீத்தா வரலட்சுமி பூஜை
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு 3 பையன்கள் பிறந்த நிலையில் தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார். இந்த நிலையில் தான் இன்று வரலட்சுமி பூஜையை முன்னிட்டு தனது வீட்டில் வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ப்ரீத்தா விஜயகுமார் குடும்பத்துடன் வரலட்சுமி விரதம்
அதில் இது என் அம்மன் என்று குறிப்பிட்டு வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படங்களையும், கணவருடன் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பொதுவாக தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி பௌர்ணமி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரக் கூடிய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை கடைபிடிக்கப்படுகிறது.
ப்ரீத்தா வரலட்சுமி விரதம் புகைப்படங்கள்
அந்த வகையில் இன்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு ஃப்ரீத்தா வரலட்சுமி விரதம் கடைபிடித்து அம்மனுக்கு பூஜைகள் செய்துள்ளார். பூஜையில் அவர் கலசம் வைத்து, மகாலட்சுமிக்கு மலர்களால் அலங்கரித்து, பக்திப்பூர்வமாக வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.