அரசியிடம் பேச போய் அடி வாங்கி அவமானப்பட்ட குமரவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ!
Kumaravel meet Arasi in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தோழியை பார்க்க சென்ற அரசியை வழியில் சந்தித்து பேச சென்று குமரவேல் அடி வாங்கி அவமானப்பட்ட சம்பவம் தான் இன்றைய எபிசோடில் நடந்துள்ளது.

Kumaravel meet Arasi in Tamil : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பாண்டியன் குடும்பத்தை பழிதீர்க்க அரசியை காதலித்த குமரவேல் பற்றி அரசிக்கு தெரியவர அவரிடமிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அரசிக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமண நிச்சயதார்த்தமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து திரும்ண ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில், திருமணத்திற்கு முந்தைய நாள் அரசியை தனியாக சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குமரவேல் சுகன்யாவிடம் சொல்லி அனுப்பினார்.
அவரது பேச்சைக் கேட்ட அரசி அவருடன் சென்றார். ஆனால், குமரவேல் அவரை கடத்திச் சென்றுவிட்டார். இதன் காரணமாக அரசியின் திருமணம் நின்றது. இந்த நிலையில் தான் அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேல் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அரசி மற்றும் குமரவேல் இடையில் அடிக்கடி சண்டை வர ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்த குமரவேல் திட்டம் போட்டார். இதற்காக குமரவேல் வேறொரு பெண்ணிடம் பழகுவது போன்று ஆக்டிங் செய்தார்.
இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் குமரவேலுவிற்கு சண்டை வர அரசி தனக்கு உண்மையில் திருமணம் நடக்கவில்லை என்ற உண்மையை சொல்ல பிறகு பாண்டியன் வந்து அரசியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து தன்னை காதலிப்பது போன்று ஏமாற்றி கடத்தி சென்றதாக அரசி குமரவேல் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.
அதன் பிறகு அவருக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது போன்று மனம் திருந்தி வாழ தொடங்கினார். அரசியின் நினைவுகள் அவரை வாட்டி வதைக்க மனம் திருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்க எண்ணினார். மேலும், அரசியை தனியாக சந்தித்து அவரிடம் அரசிக்கிட்ட மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொன்னார். இந்த நிலையில் தான் மாரி தனது மகன் குமரவேல் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அரசியிடம் கூறிய நிலையில் ராஜீ அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து முத்துவேல் குமரவேலுவிற்கு பெண் பார்த்து நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று குமரவேல் கூறிய நிலையில் இதை பற்றி சுகன்யா அரசியிடம் கூறினார். ஆனால், மீனா மற்றும் ராஜீ இதை பற்றி ஏன் அவரிடம் சொல்கிறீர்கள்? உங்களால் தான் இவ்வளவு பிரச்சனை. அப்படியிருக்கும் போது இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டனர்.
இந்த சூழலில் தான் குமரவேலுவிற்கு மீண்டும் அரசி மீது காதல் வரவே உண்மையில் அவரை திருமணம் செய்ய மனதில் நினைத்துள்ளார். அரசியும் குமரவேல் மீது காதல் வயப்படும் நிலையில் அல்லது இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் உண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் குமரவேல் மற்றும் அரசி தொடர்பான காட்சிகள் இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் திருமணத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு வந்த அரசி முதல் முறையாக தனது தோழியை பார்க்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அப்போது அவரை வழியில் சந்தித்த குமரவேல் அவரிடம் பேச முயன்றார். அப்போது அவர்களை சந்தித்த சரவணன், குமரவேலுவிடம் சண்டையிட்டுள்ளார். மேலும், அவரை அடித்துள்ளார். மேலும், ஒரு முறை சொன்னால் புரியாதா? ஏன் என்னுடைய தங்கை பின்னாடி சுத்துர என்று பலமுறை வார்னிங் கொடுத்துள்ளார். அதோடு அரசியை தோழி வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.