ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ள அந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் சொந்த கதையான "மூக்குத்தி அம்மன்" படத்தில் நடித்துவருகிறார் நயன். 

இதற்காக கன்னியாகுமரி சென்றுள்ள நயன்தாரா அங்குள்ள கோவில்களில்  காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதால் தான் கோவில், கோவிலாக சென்று வழிபாடு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காதலர் விக்னேஷ் சிவனை விட்டு கணநேரமும் பிரியாத நயன், எங்கு செல்வதாக இருந்தாலும் அவருடன் தான் செல்கிறார். மேலும் அனைத்து பண்டிகைகளையும் விக்கியுடன் சேர்ந்து தான் நயன் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாள், தேங்க்ஸ் கிவிங் கொண்டாட்டத்தின் போது கூட விக்கியை விட்டு விலகாமல் நெருக்கமாக இருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இந்நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா  கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. செம்ம ரொமாண்டிக் லுக்கில் நயனும், விக்கியும் இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ விதவிதமா போட்டோ போடுறது எல்லாம் நல்லா தான் இருக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்கப்பா என கோரிக்கை வைத்துள்ளனர்.