F1 பட ரீமேக்... கண்டிப்பா அஜித் தான் நடிப்பார் - நரேன் கார்த்திகேயன் சொன்ன குட் நியூஸ்
நடிகர் அஜித் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், அஜித் தான் கார் பந்தயம் தொடர்பான படங்களில் நடிக்க மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித், இவருக்கென தமிழகம் மட்டுமல்ல பல நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார், மற்றும் இது ஒரு ஜாலியான கேங்க்ஸ்டர் கதையாக அமைந்துள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது வரை எந்தவித படத்தையும் ஒப்புகொள்ளலாம் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு சாதித்தும் வருகிறார்.
இந்த நிலையில் கார் பந்தயம் தொடர்பான படங்களில் நடிக்க அஜித் மீக பொருத்தமானவர் என பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பாக திரையரங்கில் "ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்" நடைபெற்றது.
"ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்" காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்வின் இறுதி நாளையொட்டி பிரபல F1 கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், F1 கார் பந்தயத்தில் மீண்டும் இந்தியர்கள் இடம்பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனத் தெரிவித்தார். OTT மூலமாக "ட்ரைவ் டூ சர்வைவ்" சீரியஸ் மூலம் இந்தியாவில் F1 பந்தயம் பார்க்கும் பார்வையாளர்களிம் என்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கார் பந்தயத்துக்கான ட்ரக்குகள் தமிழகத்தில் தான் அதிகம் எனவும் தெரிவித்தார்.
இதன் தொடர்ந்து தமிழில் F1 படம் எடுத்தால் யார் நடித்தால் நன்றாக இருக்கும்.? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், கண்டிப்பாக அஜித்குமார் தான். அவர் தான் பொறுத்தமான நடிகர். 50 வயதை கடந்தாலும் கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி பங்கெடுத்து வருகிறார் என தெரிவித்தார்.
டூ வீலர் ரேசராக இருந்த அஜித் தற்போது கார் பந்தயத்தில் பங்கு கொண்டு வருகிறார் எனத் தெரிவித்தார்.கார் ரேசில் அஜித்குமாருக்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறதே? எனவே அஜித்துக்கு நீங்கள் ஏதேனும் டிப்ஸ் தருவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு., ரேசில் விபத்துகள் நடப்பது இயல்பான விஷயம் தான் என தெரிவித்தவர்,
அஜித்குமாருக்கு நடக்கும் விபத்துகளுக்கும் இயல்பாக தான் பார்க்க வேண்டும் எனத் கூறினார், அஜித் குமார் கார் ரேஸ் குழுவில் நானும் தற்போது இணைந்துள்ளதாக கூறிய அவர், . வெற்றி பெருவதற்கான யுத்திகளை இணைந்து செயல்படுத்துவோம் என தெரிவித்தார்.