- Home
- Cinema
- ஆளு தான் ஒல்லி... ஆனா இசையில கில்லி! இசையமைப்பாளர் அனிருத்தின் ஆச்சரியப்படுத்தும் சொத்து மதிப்பு!
ஆளு தான் ஒல்லி... ஆனா இசையில கில்லி! இசையமைப்பாளர் அனிருத்தின் ஆச்சரியப்படுத்தும் சொத்து மதிப்பு!
Music director Anirudh Networth: இன்று தன்னுடைய 35 -ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்த முழு விவரம் இதோ..

தவறாத தனுஷ் கணிப்பு:
இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தபடியாக பல திறமையான இசையமைப்பாளர்கள் ரசிகர்களை இசையால் கவர்ந்தாலும், 90-ஸ் மற்றும் 2-கே ஹிட்ஸ் வைபுக்கு ஏற்ற போன்ற இசை மற்றும் பாடல்களை கொடுத்து, இளம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் அனிருத். நடிகர் தனுஷின் தூண்டுதல் காரணமாக, கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனுஷுன் கணிப்பு சரி எனது போலவும்... அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல் படத்திலேயே உலகளவில் பேமஸ் ஆனார் அனிருத்.
ஒய் திஸ் கொலவெறி பாடல்:
குறிப்பாக 3 படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற, ஒய் திஸ் கொலவெறி பாடல் தமிழ் ரசிகர்களை மட்டும் இன்றி... உலகளவில் பல இசை ஆர்வலர்களை ஆட்டம் போட வைத்தது. முதல் படத்திலேயே தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்திய அனிருத்துக்கு, கோலிவுட்டில் அடுத்தடுத்து ஆபர்கள் குவிந்தன. தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்களாக இருக்கும், விஜய், அஜித், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற அனைத்து பிரபலங்களுக்கும் இசையமைத்து விட்டார் இந்த இளம் இசை அசுரன் அனிருத்.
பாலிவுட்டிலும் வெற்றி கொடி:
இவ்வளவு ஏன், பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் தன்னுடைய வெற்றி கொடியை நாட்டி விட்டார். அதே போல் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளிலும் அனிருத்தின் இசைக்கு படு டிமாண்ட். தற்போதைய நிலவரப்படி, அனிருத் நிற்பதற்கு கூட நேரமின்றி சூறாவளியாய் சுழன்று இசையமைத்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு மட்டும் இவர் இசையில், விடாமுயற்சி, கிங்டம், மதராஸி, கூலி ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்து பாலிவுட் படம் ஒன்றும் வெயிட்டிங்கில் உள்ளது. இது தவிர பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அனிருத் பிறந்தநாள்:
புகழின் உச்சத்தின் இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு இன்று காலை முதலே தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் சொத்து மதிப்பு:
தன்னுடைய முதல் படத்திற்கு சம்பளமாக சில ஆயிரங்களை மற்றும் பெற்று கொண்ட அனிருத், இதை தொடர்ந்து லட்சங்களில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினார். தற்போது தான் இசையமைக்கும் படங்களுக்கு ரூ. 10 முதல் ரூ.12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். மேலும் இவருடைய ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
டிவி, சோபா-வை பார்த்து ஷாக்கான மீனா- என்ன ரூ.10 லட்சமும் காலியா?