- Home
- Cinema
- அனுஷ்காவிற்கு பப்ளிசிட்டி தேவையில்லை:அவரோட ஆக்டிங்கே படத்தை ஹிட் கொடுக்கும்: இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி!
அனுஷ்காவிற்கு பப்ளிசிட்டி தேவையில்லை:அவரோட ஆக்டிங்கே படத்தை ஹிட் கொடுக்கும்: இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி!
Anushka Shetty Not Part in Ghaati Movie Promotion :காட்டி பட விளம்பர நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அனுஷ்கா குறித்த கேள்விகளுக்கு இயக்குனர் கிருஷ்ணா பதிலளித்தார். அவரது நடிப்பே படத்தை வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

Anushka Shetty Not Part in Ghaati Movie Promotion : அடுத்த வாரம் வெளியாகவுள்ள காட்டி திரைப்படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கிருஷ், தயாரிப்பாளர் ராஜீவ் ரெட்டி, நடிகர்கள் ஜெகபதி பாபு, விக்ரம் பிரபு கலந்து கொண்டனர்.
“சில கதைகள் இயல்பாகவே வலுவான உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். காட்டியும் அப்படிப்பட்ட ஒரு கதை. கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலுவான உணர்ச்சிகள், துணிச்சலான பாத்திரங்கள், உன்னதமான கருத்துக்கள் இவை அனைத்தும் இக்கதையை உருவாக்க உத்வேகம் அளித்தன” என்று இயக்குனர் கிருஷ் தெரிவித்தார்.
நாயகி அனுஷ்கா ஷெட்டி பட விளம்பரங்களில் பங்கேற்காதது குறித்த கேள்விகளுக்கு கிருஷ் பதிலளிக்கையில், “விளம்பரங்களில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு அனுஷ்காவின் விளம்பரம் தேவையில்லை.. அவரது நடிப்பு இருந்தால் போதும்” என்று கிருஷ் ஜாகர்லமுடி கூறினார். ‘சீலாவதி’ வேடத்தில் அனுஷ்கா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அனுஷ்கா போன்ற சூப்பர் ஸ்டார் நடித்த படம் என்பதால் காட்டி நிச்சயம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பவன் கல்யாண் நடிக்கும் ஹரி ஹரா வீர மல்லு படத்திலிருந்து விலகியதற்கான காரணங்களை கிருஷ் விளக்கினார். “பவன் கல்யாண் எனக்கு மிகவும் பிடித்தவர். நான் அவரை மிகவும் ரசிக்கிறேன். ஏ.எம். ரத்னம் தயாரித்த படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களுடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. கோவிட்-19 சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று” என்று தெரிவித்தார்.
காட்டி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனுஷ்கா ஷெட்டியின் வலுவான கதாபாத்திரம், கிழக்கு தொடர்ச்சி மலைகள் பின்னணி, ஜெகபதி பாபு, விக்ரம் பிரபு ஆகியோரின் முக்கிய வேடங்கள் பார்வையாளர்களை கவரும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.