"இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ"... பஹத் பாசில், நஸ்ரியா ரொமான்ஸ்... இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்...!
First Published Nov 16, 2019, 11:25 AM IST
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான நஸ்ரியா, 2013ம் ஆண்டு "நேரம்" படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'ராஜா ராணி', 'நய்யாண்டி', 'திருமணம் எனும் நிக்கா' போன்ற தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்தில் முன்னணி நடிகரும், பிரபல இயக்குநரின் மகனுமான பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
தற்போது தனது தலைமுடையை குட்டையாக வெட்டியுள்ள நஸ்ரியா. அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்தார். அதனால் அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின.
தனது நியூ லுக் ஹேர் ஸ்டைலில் நஸ்ரியா, காதல் கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ரொமெண்டிக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?