- Home
- Cinema
- Dhanush Divorce : ரஜினி மகளை “விவாகரத்து” செய்யுற ஐடியா இல்ல… திடீரென ஜகா வாங்கும் தனுஷ் - பின்னணி என்ன?
Dhanush Divorce : ரஜினி மகளை “விவாகரத்து” செய்யுற ஐடியா இல்ல… திடீரென ஜகா வாங்கும் தனுஷ் - பின்னணி என்ன?
விவாகரத்து விஷயத்தில் தனுஷ் மனம்மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனக்கு இல்லை என்று கூறியுள்ளாராம்.

நடிகர் தனுஷுக்கும் (Dhanush), ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் (AIshwaryaa) கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி (Rajini) கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வருகிறது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவாகரத்து விஷயத்தில் தனுஷ் மனம்மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனக்கு இல்லை என்று கூறியுள்ளாராம் தனுஷ். விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்று தனுஷ் (Dhanush) தன்னுடைய வழக்கறிஞரிடம் விசாரித்துள்ளாராம்.
தற்போதுவரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவை தான் தனுஷ் எடுத்துள்ளாராம். ஆனால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் மனநிலையில் அவர் இல்லை என்றே கூறப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் அட்வைஸ் செய்து வருகிறார்களாம். இதையெல்லாம் தனுஷ் ஏற்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.