டிடி ரிட்டர்ன்ஸ் முதல் மாமன்னன் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட்
தமிழ் சினிமாவில் வருகிற ஜூலை 28-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
டிடி ரிட்டர்ன்ஸ்
சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் தில்லுக்கு துட்டு. இதுவரை வெளியான இப்படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியடைந்த நிலையில், தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீடு)
தோனி தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் தான் எல்ஜிஎம். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்துள்ள இப்படத்தில் நதியா, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் ஜுலை 28-ந் தேதி திரைகாண உள்ளது.
பீட்சா 3 தி மம்மி
பீட்சா படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அதன் மூன்றாம் பாகம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. மோகன் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் அஸ்வின் காக்காமூ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா - அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
லவ்
பரத்தின் 50-வது படம் லவ். ஆர்.பி.பாலா இயக்கியுள்ள இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இப்படமும் வருகிற ஜூலை 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதேபோல் எம்.ஆர்.மாதவன் இயக்கிய டைனோசர்ஸ் திரைப்படமும் ஜூலை 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கேங்ஸ்டர் படமாக இது தயாராகி உள்ளது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஓடிடியை பொறுத்தவரை மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூலை 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர நடிகை சுனைனா நடிப்பில் வெளிவந்த ரெஜினா திரைப்படமும் ஜூலை 25-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஆபரேஷன் செய்து தான் அழகானேனா... இம்புட்டு கவர்ச்சிக்கு காரணம் என்ன? பியூட்டி சீக்ரெட்டை வெளியிட்ட ஹனி ரோஸ்