பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர்... ஆரிக்கு வாழ்த்து கூறி அசரவைத்த சக பிக்பாஸ் போட்டியாளர்கள்...!
இன்று பிக்பாஸ் ஆரி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை, மாயா ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக பிரபலமடையாத ஆரிக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. உதாரணமாக ஆரம்பம் முதலே ரசிகர்கள் ஆரிக்கு கொடுத்த அளவு கடந்த சப்போர்ட்டை சொல்லலாம்.
சக போட்டியாளர்களிடம் மிகவும் கண்ணியத்துடன், போட்டி களத்தில் துணிச்சல், புத்திசாலிதனத்துடன் விளையாடிய ஆரியை அனைவருக்கும் பிடித்திருந்தது. அதேநேரத்தில் ஆரியுடன் அடிக்கடி சண்டை போட்டு பாலாஜி தேவையில்லாத கெட்டப்பெயரை தேடிக்கொண்டார்.
பிக்பாஸ் கடைசி வாரத்தில் தான் இருவருக்கும் இடையே சுமூக உறவு ஏற்பட்டது. முத்தங்களுடன் பிரிவை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அண்ணன் - தம்பியாக பழகினர்.
இன்று பிக்பாஸ் ஆரி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதேபோல் பிக்பாஸ் பாலாஜியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர் ஆரி, இனி வாழ்க்கைல வெற்றி மட்டுமே காண வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கு முத்தம் கொடுத்த போட்டோ சண்டை போட்ட போட்டோ என சில போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார் பாலாஜி.
ரியோ ராஜ், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரி, கடவுளின் ஆசீர்வாதம்... மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருங்கள் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியுடன் கடைசி வரை அன்புடன் பழகி வந்த அனிதா, பிக்பாஸ் வீட்டிற்குள் இருவரும் இருக்கும் சில போட்டோக்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரி, இந்த ஆண்டு வெற்றிகரமானதாக அமையட்டும் என வாழ்த்து கூறியுள்ளார்.
ஆரியின் நெருங்கிய தோழியான சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், ஆரி மற்றும் அவருடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது பெங்களூருவில் இருப்பதாகவும், விரைவில் சென்னை திரும்பியதும் இருவரையும் நேரில் சந்திக்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.