நயன்தாரா அபார்ட்மெண்ட்டில் புது வீடு வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வசித்து வரும் அப்பார்ட்மெண்டில் பிரபல நடிகை ஒருவரும் வீடு வாங்கியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - இயக்குநர் விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. விரைவில் திருமணம் செய்துள்ள திட்டமிட்டுள்ள இந்த காதல் ஜோடி ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.அதனை உறுதி செய்யும் விதமாக கொரோனா லாக்டவுன் காலத்தில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.
நயன்தாரா பெரும்பாலும் சென்னையில் வசிப்பதை தான் அதிகம் விரும்புகிறார். கொரோனா லாக்டவுனின் போதும் சரி, ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்ற போதும் சரி அனைத்துமே சென்னையில் இருந்து தான் நடந்தது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் என்பதால் சென்னையில் தங்கியிருக்கும் நயன்தாரா. அதற்காக சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் சொகுசு வீடு ஒன்றையும் வாங்கி வைத்துள்ளார்.
சென்னை எழும்பூர் அருகேயுள்ள சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் 3வது பிளாட்டில் நயன் - விக்கி ஜோடி வசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அதே பிளாட்டின் 7வது மாடியில் நடிகை நிக்கி கல்ராணி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம்.
தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ஆதிக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நிக்கி கல்ராணி சென்னையில் வீடு வாங்கியுள்ளது நயனை போலவே ஒன்றாக வசிக்கவோ? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.