தண்ணீரில் மிதக்கும் தாமரை... வெள்ளை நிற உடையில் நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்....!

First Published Nov 14, 2019, 1:42 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதல் படமான "அட்டகத்தி" மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் சாயல் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அழகான கிராமத்து கதாபாத்திரங்களில் அச்சு அசலாக  கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்திருந்தார். 

தற்போது முழு நீள ஆக்‌ஷன் படமான 'ஐபிசி 376' மூலம், போலீஸ் அதிகாரியாக நடித்து கெத்து காட்டியுள்ளார் நந்திதா. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்ஷியல் படமான இதில் டூப் இல்லாமல் துணிச்சலாக சண்டை காட்சிகளில் நடித்திருந்ததாக நந்திதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. 

என்னதான் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் நந்திதா ஸ்வேதாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பட வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளம் ஒன்றில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நந்திதா. வெள்ளை நிற உடையில் நந்திதா கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.