கட்டி அணைத்த படி ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு... காதலரை அறிமுகப்படுத்திய பிரபல நடிகை...!
ஆனால் மடோனா செபாஸ்டின் ஸ்பெஷல் சர்ப்ரைஸாக காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயினளில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மடோனா செபாஸ்டின்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவண், ஜுங்கா, தனுஷுடன் பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது கைவசம் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, கன்னடத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
நாளை காதலர் தினம் கொண்டாட்டப்பட உள்ளதை முன்னிட்டு திரையுலகினர் பலரும் தங்களுடைய கொண்டாட்டம் குறித்த பிளானை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் மடோனா செபாஸ்டின் ஸ்பெஷல் சர்ப்ரைஸாக காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மலையாளத்தில் ஓம் சாந்தி ஓஷனா, தமிழில் நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராபி அபிரஹாம், இவர் இசையமைப்பாளராகவும் உள்ளார். ராபி அபிரஹாமை கட்டி அணைத்த படி இருக்கும் போட்டோக்களை மடோனா செபாஸ்டின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் உன்னை சந்தித்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.உன்னுடன் பழகி உன்னைப் பற்றி அறிந்து கொண்டது ஆச்சர்யமளிக்கிறது. உன்னோடு இணைந்திருப்பதை மிக நல்ல தருணங்களாக கருதுகிறேன் என பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் மடோனா செபாஸ்டின் காதலில் விழுந்து விட்டார் என வாழ்த்துக்கூறி வருகின்றனர்.
இதற்கு முன்னதாகவும் பலமுறை ராபி உடன் மடோனா செபாஸ்டின் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. ஆனால் இருவரும் எவ்வித மறுப்பு தெரிவிக்காத நிலையில், காதலர் தினத்திற்கு முதல் நாள் மடோனா செபாஸ்டின் வெளியிட்டிருக்கும் போட்டோவும், கேப்ஷனும் காதலை உறுதிபடுத்துவது போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.