ஓணம் ஸ்பெஷல்... அபர்ணா பாலமுரளி அடிபொலி போட்டோஷூட் இதோ
சூரரைப் போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி, ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Aparna Balamurali Onam Special Photos
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, கடந்த 2015-ம் ஆண்டு முதல் மலையாள படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரியளவில் புகழ் வெளிச்சம் கிடைக்கவில்லை. அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது தமிழ் படங்கள் தான். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த படம் 8 தோட்டாக்கள்.
திருப்புமுனை தந்த தமிழ் படம்
இதையடுத்து ஜிவி பிரகாஷ் ஜோடியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது சூரரைப் போற்று தான். சுதா கொங்கரா இயக்கிய அப்படத்தில் பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் மதுரைக்கார பெண்ணாகவே வாழ்ந்திருந்தார்.
தேசிய விருது
சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திறம்பட நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளி, அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். அவர் வாங்கிய முதல் தேசிய விருது இதுவாகும். மேலும் அப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர், சைமா விருதுகளும் அவருக்கு கிடைத்தன.
தமிழில் குவியும் வாய்ப்பு
சூரரைப் போற்று படத்திற்கு பின்னர் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் குறிப்பிட்ட படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்தார். குறிப்பாக நித்தம் ஒரு வானம், ராயன் போன்ற படங்களில் மட்டும் தான் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
போடோஷூட்
நடிகை அபர்ணா பாலமுரளி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது ஓணம் ஸ்பெஷல் போட்டோஷுட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
ஓணம் சேலையில் அபர்ணா
ஓணம் ஸ்பெஷல் சேலை அணிந்து பூக்களின் நடுவே தேவதை போல அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார் அபர்ணா. அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடிபொலியாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.