முதல் நாள் ஷூட்டிங்கிற்கு வந்த வடிவேலு... இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என்ன ஆச்சு? ஷாக்கில் ரசிகர்கள்!
நடிகர் வடிவேலு, செப்டம்பர் மத்தியில் இருந்து ஷூட்டிங் பணிகளில் கலந்து கொள்வேன் என, தெரிவித்திருந்த நிலையில் முதல் நாள் ஷூட்டிங்கில் இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சில வெளியான நிலையில் இதை பார்த்து ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகியுள்ளனர். அந்த அளவிற்கு உடல் இளைத்து அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளார்.
1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? என்று ஏங்கி வந்த ரசிகர்களின் ஏக்கங்களை தீர்க்க தற்போது மீண்டும் தன்னுடைய நடிப்பு அவதாரத்தை எடுத்துள்ளார்.
இவரை ரசிகர்கள் இந்த அளவிற்கு ரசிக்க காரணம், நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.
கடந்த 10 ஆண்டுகள் இவரது போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பதே அபூர்வமாக இருந்தாலும், அப்படி இவர் நடித்த படங்களும் பெரிதாக இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் ஓவ்வொரு நாளும் மீம்ஸ் நாயகனாக வலம் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.
தற்போது இவருக்கு சினிமாவில் விடிவு காலம் பிறந்தது போல், இவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டு அடுத்தடுத்த படங்களில் பிஸியாகியுள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து விட்டு, பின்னர் காமெடி நாயகனாகவே தொடர்வேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்று சொன்னது போல், ஷூட்டிங்கிற்கு வடிவேலு வந்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியோடு உங்களுக்கு என்ன ஆனது என அக்கறையோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.