டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் பிரபு..!! வைரலாகும் புகைப்படம்..!!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமணம் இன்று திருவண்ணாமலை-யில் நடைபெற்ற நிலையில், இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகளான, பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் இராமநாதன் துளசி வாண்டையார் என்பவருக்கும் இன்று திருவண்ணாமலை கோவிலில் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலம் என்பதால், தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, கட்சினர், மற்றும் கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஏற்கனவே டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார். மேலும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாரிசுகளான, நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம் குமார் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.