நடிகர் கருணாஸ் மனைவியா இது?... அல்ட்ரா மார்டன் லுக்கில் படு சூப்பராக போஸ் கொடுத்த பாடகி கிரேஸ்...!
நடிகர் கருணாஸின் மனைவி பாடகி கிரேஸ் மட்டும் தனியாக நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
2001ம் ஆண்டு இயக்குநர் பாலாவின் நந்தா படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கருணாஸ். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்துள்ளார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் கருணாஸ் கல்லூரி மேடைகளில் பாட செல்வது வழக்கம். அப்படி சென்ற கல்லூரி ஒன்றில் தான் நாட்டுப்புற பாடகியான கிரேஸ் அறிமுகம் கிடைத்தது.
ஆரம்ப காலத்தில் கருணாஸ் கல்லூரி மேடைகளில் பாட செல்வது வழக்கம். அப்படி சென்ற கல்லூரி ஒன்றில் தான் நாட்டுப்புற பாடகியான கிரேஸ் அறிமுகம் கிடைத்தது. நட்பாக பழகிய இருவரும் காதலர்களாக மாறினர். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
நடிகராக மட்டுமே இருந்து வந்த கருணாஸ் இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராகவும் உள்ளார். கிரேஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்றார்.
சமீபத்தில் கறுப்பு நிற உடையில் காதல் மனைவியுடன் கிரேஸ் உடன் சேர்ந்து கருணாஸ் நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
தற்போது கிரேஸ் மட்டும் தனியாக அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
தனது உடல்வாகிற்கு ஏற்ற மாதிரியான சூப்பர் மார்டன் உடையில் போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அதிலும் ஒவ்வொரு போட்டோவிலும் முகத்தில் தவழும் புன்னகை மாறாமல் மாஸ் காட்டியிருக்கிறார் கிரேஸ்.
தற்போது கிரேஸ் கருணாஸ் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.