காதல் மனைவிக்கு முத்தத்துடன் காதலர் தின வாழ்த்து சொன்ன ஆர்யா... வைரலாகும் க்யூட் போட்டோ...!
தன்னுடையை காதலர் தின வாழ்த்துக்களை மனைவி சாயிஷாவுக்கு தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.
பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய காதல் இணைக்கு பரிசுகளை கொடுத்து தங்களுடைய காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் நடிகர், நடிகைகளின் காதலர் தின ஸ்பெஷல் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்போது நடிகர் ஆர்யா, தன்னுடைய காதல் மனைவின் சாயிஷாவுடன் வெளியிட்டுள்ள போட்டோ கவனம் ஈர்த்துள்ளது.
கோலிவுட்டின் க்யூட் சாக்லெட் பாயாக வலம் வந்த ஆர்யா, சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் சாயிஷாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றியது.
பிரபல இந்தி திரையுலகின் நட்சத்திர தம்பதியான திலீப் குமார் - சாயிரா பானுவின் பேத்தியான சாயிஷாவை கடந்த 2019ம் அண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் டூ கோலிவுட் வரை பல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
முதலாம் ஆண்டு திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடிவிட்டு, இரண்டாம் ஆண்டு திருமண நாளுக்காக காத்திருக்கும் இந்த தருணத்தில், தன்னுடையை காதலர் தின வாழ்த்துக்களை மனைவி சாயிஷாவுக்கு தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.
சாயிஷாவின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ள ஆர்யா, அவருக்கு காதலர் தின வாழ்த்தை சொல்லிவிட்டு, எனக்கான கிப்ட் எங்கே என்றும் கேட்டுள்ளார். ஆர்யா வெளியிட்டுள்ள இந்த க்யூட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆர்யா வெளியிட்ட அன்பான போட்டோவையும், குறும்புத்தனம் மிக்க ட்வீட்டையும் பார்த்த ரசிகர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என மனதார வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.