காலேஜ்-ல சேர போறீங்களா? இந்த டாக்குமெண்ட்ஸ்லாம் ரெடி பண்ணுங்க!
12-வது ரிசல்ட் வந்துருச்சா? பதட்டப்படாம, உங்க கனவு காலேஜ்ல சீட் கன்பார்ம் பண்ண இந்த டாக்குமெண்ட்ஸ்லாம் ரெடி பண்ணுங்க!

எக்ஸ்க்ளூசிவ் செக்லிஸ்ட்
12வது ரிசல்ட் வந்துருச்சு! அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்குப் பிடிச்ச காலேஜ்ல உங்க சீட்டை கன்பார்ம் பண்ண, கடைசி நேர டென்ஷனைத் தவிர்க்க, இதோ உங்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் செக்லிஸ்ட்! இதெல்லாம் ரெடியா வச்சுக்கிட்டா, உங்க காலேஜ் கனவு ஈஸியா பலிக்கும்!
மார்க் ஷீட் & டி.சி
மார்க் ஷீட் & டி.சி: ரிசல்ட் வந்ததும் உங்க ஸ்கூல்ல போய் இத ரெண்டையும் மறக்காம வாங்கிடுங்க. இதுதான் உங்க காலேஜ் என்ட்ரிக்கான முதல் பாஸ்!
ஐடி கார்டு (ஆதார்
ஐடி கார்டு (ஆதார்): இன்னும் ஆதார் எடுக்கலன்னா, உங்க பர்த் சர்டிஃபிகேட்ட வச்சு இ-சேவைலயோ இல்ல போஸ்ட் ஆபீஸ்லயோ உடனே அப்ளை பண்ணுங்க. ஏற்கனவே இருந்தா, அதுல எதுவும் அப்டேட் பண்ண வேண்டியிருக்கான்னு செக் பண்ணிடுங்க!
பர்த் சர்டிஃபிகேட்
பர்த் சர்டிஃபிகேட்: ஸ்கூல்ல கொடுத்திருந்தாலும் ஒரு காப்பி எக்ஸ்ட்ராவா வெச்சுக்கோங்க. தொலைஞ்சுருச்சுன்னா, ஆன்லைன்ல அப்ளை பண்ணி புதுசா எடுக்கலாம். தப்பும் திருத்திக்கலாம்!
இருப்பிடச் சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ் (Domicile Certificate): நீங்க தமிழ்நாட்டுல இருக்கீங்களா? கவர்ன்மென்ட் கோட்டாவுல சீட் வேணுமா? அப்போ இது கண்டிப்பா வேணும்! 8th டூ 12th வரைக்கும் இங்க படிச்சவங்களுக்கு இது தேவையில்லை. மத்தவங்க உடனே ரெடி பண்ணுங்க!
வருமானச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ் (Income Certificate): ஸ்காலர்ஷிப், லோன் இல்ல கவர்ன்மென்ட் ஹெல்ப் வேணுமா? அப்போ இது ரொம்ப முக்கியம்! ஆனா, இதுக்கு ஒரு வேலிடிட்டி பீரியட் இருக்கு. அதனால புதுசா எடுத்து வெச்சுக்கோங்க!
ஜாதிச் சான்றிதழ்
ஜாதிச் சான்றிதழ் (Caste Certificate): நீங்க ரிசர்வேஷன் கேட்டகிரில வரீங்களா? அப்போ உங்க அப்பா சர்டிஃபிகேட்ட வச்சு பக்கத்துல இருக்க இ-சேவை மையத்துல புதுசா அப்ளை பண்ணலாம்.
சோ, 12வது ரிசல்ட் வந்ததும் வேற எதுவும் யோசிக்காம, இந்த டாக்குமெண்ட்ஸ்லாம் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க! உங்க கனவு காலேஜ் உங்களை எதிர்பார்த்துக்கிட்டிருக்கு! ஆல் தி பெஸ்ட்!