MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ஜாக்பாட்! 12th, ITI படித்தவர்களுக்கு அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு! ₹59,600 வரை சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

ஜாக்பாட்! 12th, ITI படித்தவர்களுக்கு அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு! ₹59,600 வரை சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

Visvesvaraya Museum recruitment 2025 விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர், டெக்னீஷியன் உட்பட 12 மத்திய அரசு வேலைகள்! மாதம் ரூ.59,600 வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Oct 04 2025, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Visvesvaraya Museum recruitment 2025 விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் மத்திய அரசு பணி!
Image Credit : Gemini

Visvesvaraya Museum recruitment 2025 விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் மத்திய அரசு பணி!

அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! பெங்களூரை மையமாகக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Visvesvaraya Industrial & Technological Museum - VITM) பல்வேறு காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் என்பதால், வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் நிச்சயம். மொத்தம் 12 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது, விண்ணப்பிக்கக் கடைசி தேதி அக்டோபர் 20, 2025.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காலியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரம்
Image Credit : Getty

காலியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரம்

இந்த அறிவிப்பில் மொத்தம் மூன்று முக்கியப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. Exhibition Assistant 'A': இந்தக் காலியிடத்துக்கு விண்ணப்பிக்க, விஷுவல் ஆர்ட் / ஃபைன் ஆர்ட்ஸ் / கமர்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் (Graduate) பெற்றிருக்க வேண்டும்.

 காலியிடங்கள்: 01

 மாதச் சம்பளம்: ₹59,600/-

2. Technician 'A': பத்தாம் வகுப்பு (SSC/10th) தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் (கார்பென்ட்ரி/ ஃபிட்டர்/ எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்) ஐ.டி.ஐ (ITI) சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். சான்றிதழின் கால அளவைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணி அனுபவம் தேவை.

 காலியிடங்கள்: 06

 மாதச் சம்பளம்: ₹38,908 /-

3. Office Assistant (Gr.III): இந்தப் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். அத்துடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் என டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 காலியிடங்கள்: 05

 மாதச் சம்பளம்: ₹38,908/-

35
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
Image Credit : Getty

வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்

பதவிகளைப் பொறுத்து வயது வரம்பில் சற்று மாற்றம் உள்ளது. Exhibition Assistant 'A' மற்றும் Technician 'A' பதவிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். Office Assistant (Gr.III) பதவிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. 

விண்ணப்பக் கட்டணம்:

• பெண்கள், பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), முன்னாள் ராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

• மற்றவர்கள் ₹750 + 18% GST (மொத்தம் ₹885) செலுத்த வேண்டும்

45
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை
Image Credit : stockPhoto

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் திறன் தேர்வு (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.vismuseum.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

55
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை
Image Credit : Getty

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை

• விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.09.2025

• விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிக அவசியம்

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(15.4 ov)194/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image2
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image3
8th Pay Commission: 1.83 முதல் 4 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர்? யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?
Related Stories
Recommended image1
Central Govt Jobs : ₹2.09 லட்சம் சம்பளம்! ஐஐடி மெட்ராஸில் 37 மத்திய அரசு வேலைகள் அறிவிப்பு!
Recommended image2
₹40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! - இன்ஜினியரிங், CA, MBA படித்தவர்களுக்கு HUDCO -வில் Trainee Officer வாய்ப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved