MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ரூ.1.80 லட்சம் சம்பளம்: திருச்சி பெல் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் - முழு பட்டியல் வெளியானது

ரூ.1.80 லட்சம் சம்பளம்: திருச்சி பெல் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் - முழு பட்டியல் வெளியானது

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Velmurugan s
| Updated : Feb 13 2025, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.1.80 லட்சம் சம்பளம்: திருச்சி பெல் நிறுவனத்தில் 400 பணியிடங்கள்   முழு பட்டியல் வெளியானது

ரூ.1.80 லட்சம் சம்பளம்: திருச்சி பெல் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் - முழு பட்டியல் வெளியானது

பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தமிழகத்திலும் திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 கிளைகளுடன் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கனரக மின் சாதனங்கள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின் படி அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும். இதனால், பொதுத்துறை நிறுவனத்தில் வெளியிடும் தேர்வு அறிவிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பெல் நிறுவனத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மத்திய அரசு வேலை வாய்ப்பு

மத்திய அரசு வேலை வாய்ப்பு

பணியிடங்கள்:

* இன்ஜினியரிங் டிரெய்னி: மெக்கானிக்கல் - 70, எலக்ட்ரிக்கல் - 25, சிவில் - 25, எலக்ட்ரானிக்ஸ் - 20, கெமிக்கல் - 05, உலோகவியல் - 05 என மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

* சூப்பர்வைசர் டிரெய்னி (டெக்னிக்கல்): மெக்கானிக்கல் - 140, எலக்ட்ரிக்கல் - 55, சிவில் - 35, எலக்ட்ரானிக்ஸ் - 20 என மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

35
திருச்சியில் வேலை வாய்ப்பு

திருச்சியில் வேலை வாய்ப்பு

கல்வித் தகுதி: இன்ஜினியர் டிரெய்னி பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இன்ஜினியரிங்/ டெக்னாலஜி படிப்பு முடித்து இருக்க வேண்டும். அல்லது ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் அல்லது இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டூயல் டிகிரி புரோகிராம் அல்லது டெக்னாலஜி படித்து இருக்க வேண்டும்.

சூப்பர்வைசர் டிரெய்னி பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். 65 சதவிகித மதிப்பெண்கள் அல்லது அதற்கு நிகரான CGPA -அனைத்து செமஸ்டர்களிலும் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

45
பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் வேலை

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். 01/02/1998 க்கு முன்பாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு:
இன்ஜினியரிங் டிரெய்னி: ரூ.60,000 - 1,80,000/-
சூப்பர்வைசர் டிரெய்னி (Technical): ரூ.33,500 - 1,20,000/-

55
மத்திய அரசு பணி

மத்திய அரசு பணி

தேர்வு முறை; 
கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.472 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் உள்பட இதர பிரிவினருக்கு ரூ.1072 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 28.02.2025 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு:
 https://www.bhel.com/recruitment

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Special TET Exam : ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ..TRB அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள்
Recommended image2
DA Hike: டிஏ 1, 2 அல்லது 3% உயர்ந்தால் உங்க சம்பளம் எவ்வளவு கூடும்? கணக்கீடு இதோ!
Recommended image3
DA Hike 2026: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்? இன்னும் 4 நாட்களில் குட்நியூஸ் வருமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved