- Home
- Career
- 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு ! உடனே விண்ணப்பிக்கவும்!
12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு ! உடனே விண்ணப்பிக்கவும்!
பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு! உதவி திட்ட மேலாளர், தொழில்நுட்ப உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரங்கள் உள்ளே!

பழங்குடியினர் நலத்துறையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான தொல்குடி திட்டம் மற்றும் வன உரிமைகள் சட்டம் (FRA) ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு எண். 02/2025 ஆகும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகங்களின் சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும் இந்த துறை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக "தொல்குடி திட்டம்" மற்றும் வன உரிமைச் சட்டம்(FRA) 2006 போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மாவட்ட, பிரிவு, தொகுதி மற்றும் கிராம அளவில் திறம்பட செயல்படுத்தவும், கண்காணிக்கவும் திட்ட மேலாண்மை அலகு (PMU) அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள், ஆரம்பத்தில் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதையும் படிங்க: சுகாதாரத் துறையில் அரசு வேலைகள் - உடனே விண்ணப்பிக்கவும்!
பணியிடங்கள் விவரம்:
பழங்குடியினர் நலத்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
உதவி திட்ட மேலாளர் (APM) - 1 இடம்
தொழில்நுட்ப உதவியாளர் (TA) - 1 இடம்
MIS உதவியாளர் (MIS) - 1 இடம்
FR செல் ஒருங்கிணைப்பாளர் (FRCC) - 2 இடங்கள்
தொகுதி வள நபர் (BRP) - 3 இடங்கள்
கிராம வள நபர் (VRP) - 21 இடங்கள்
ஒவ்வொரு பதவிக்கும் தேவையான சம்பளம், கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
முக்கிய நிபந்தனைகள்:
இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.
எந்த சூழ்நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட அலுவலர்,
பழங்குடியினர் நலம்,
வெள்ளிமலை, கள்ளக்குறிச்சி.
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படலாம். விண்ணப்பப் படிவங்களை https://kallakurichi.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.04.2025 மாலை 5.00 மணி.
மேலும் தகவலுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலப்பணியில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: டிகிரி படித்தால் போதும்! சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.40,000 சம்பளம்!