அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! TNPSC கொத்தாக வெளியிடும் முக்கிய அறிவிப்பு
அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சந்தோஷம்! டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளுக்கு தயார் செய்யுங்கள்.

TNPSC April Notification: Will the dream of a government job come true?: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசின் காலியான இடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 7 போட்டித் தேர்வுகள் அவ்வபோது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குரூப் 1, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

TNPSC
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறுகையில், தேர்வாணையம் வெளியிட்ட ஆண்டு தேர்வு கால அட்டவணையின் அடிப்படையில் அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வுகள் முறையாக நடத்தப்பட்டு முடிவுகளும் விரைவாக வெளியிடப்படும்.

tnpsc
அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம், அதாவது ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியாகும். அரசு துறைகளிடம் இருந்து காலியிடங்களின் விவரம் மார்ச் மாத இறுதிக்குள் கிடைக்கும். அதன் அடிப்படையில் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் போது காலிப் பணியிடங்களின் முழு விவரமும் அதில் இடம் பெறும்.

TNPSC
தேர்வர்களுக்கு எந்த வகையிலும் குழப்பம் இல்லாமல் விடைத்தாள் நிரப்பும் வகையில் மிகவும் எளிமையான மற்றும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து தேர்வுகளிலும் இந்த முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் விடைத்தாளை பூர்த்தி செய்யும் பணி மிகவும் எளிதானதாக இருக்கும்.
மேலும் தேர்வுக்கான முடிவுகள் தாமதமின்றி விரைவாகவும், எவ்வித குழப்பமும் இன்றியும் வெளியிட வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

