- Home
- Career
- மருத்துவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1100 காலியிடங்கள்.. சம்பளம் ரூ.2 லட்சம் வரை!
மருத்துவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1100 காலியிடங்கள்.. சம்பளம் ரூ.2 லட்சம் வரை!
TN MRB Recruitment தமிழக அரசில் 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலியிடங்கள்! MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள் உள்ளே.

தமிழக மருத்துவத் துறையில் 1100 காலிப்பணியிடங்கள்! அரசு மருத்துவராக அரிய வாய்ப்பு!
மருத்துவம் படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் மருத்துவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) மூலம் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon - General) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணிகள் மற்றும் காலியிடங்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1100 Assistant Surgeon (General) பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் என்பதால், மருத்துவத் துறையில் அரசு வேலையை எதிர்நோக்கியிருப்போருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
லட்சங்களில் சம்பளம்
இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு, ஊதியக் குழு நிலை-22 (Level-22) அடிப்படையில் மிகச்சிறந்த சம்பளம் வழங்கப்படும். இதன்படி மாத சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசு ஊழியர்களுக்கான இதர படிகளும் வழங்கப்படும்.
கல்வித் தகுதி விவரம்
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் (Tamil Nadu Medical Council) தங்களது பெயரைப் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.
வயது வரம்பு மற்றும் தளர்வுகள்
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
• வயது வரம்பு இல்லை: SC, SC(A), ST, MBC&DNC, BC, BCM வகுப்பினர் மற்றும் மேற்கண்ட வகுப்பைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.
• பிற பிரிவினருக்கு (Others): 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:
1. கணினி வழித் தேர்வு (Computer Based Examination): இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification): தேர்வு செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
• SC / SCA / ST / மாற்றுத்திறனாளிகள் (DAP): ரூ.500/-
• பிற அனைத்துப் பிரிவினர் (Others): ரூ.1,000/-
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்
இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
• விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 21.11.2025
• விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11.12.2025
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ள மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையளமான https://mrb.tn.gov.in/ என்ற முகவரியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து, இந்த அரசுப் பணி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

