MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Govt Job: 12 th முடித்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.63,000 சம்பளத்துடன் அரசு வேலை காத்திருக்கு.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Govt Job: 12 th முடித்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.63,000 சம்பளத்துடன் அரசு வேலை காத்திருக்கு.! உடனே அப்ளை பண்ணுங்க.!

தமிழ்நாடு சுகாதாரத்துறை (DHS) 44 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 8-ம் வகுப்பு முதல் MBBS படித்தவர்கள் வரை பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 11 2026, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசு வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்.!
Image Credit : Gemini AI

அரசு வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்.!

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை (DHS) சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் MBBS படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சுகாதாரத் துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு.!
Image Credit : Gemini AI

சுகாதாரத் துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு.!

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Nursing Assistant, Multipurpose Hospital Worker, Security Guard, Librarian-Statistician, Programme Administrative Assistant, Dental Technician, Medical Officer, Account Assistant, Hospital Worker, Radiographer, Health Inspector Grade-II, ANM உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு சுகாதாரத் துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Related image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
35
ரூ.63,000 வரை சம்பளம்.!
Image Credit : Gemini

ரூ.63,000 வரை சம்பளம்.!

பணியிடத்திற்கு ஏற்ப மாத சம்பளம் ரூ.6,000 முதல் ரூ.63,000 வரை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக Medical Officer பணிக்கு ரூ.63,000 வரை மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்பதால் வேலை தேடுபவர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

45
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
Image Credit : Gemini AI

ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி 20.06.2026 ஆகும். 

55
எழுத்துத் தேர்வு இல்லை.!
Image Credit : Asianet News

எழுத்துத் தேர்வு இல்லை.!

எழுத்துத் தேர்வு இல்லாமல் நேர்முகத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளதால், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை (DHS) வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

  • Executive Secretary / District Health Officer, District Health Society (DHS), District Health Office, Millerpuram, Thoothukudi – 628008, Tamil Nadu.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2026 (மாலை 5.00 மணி வரை)

விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான இணைப்புகளை சேர்த்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். 

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Recommended image2
TET Exam: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
Recommended image3
Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Related Stories
Recommended image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Recommended image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved