கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50,000! கல்வி அலுவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - உடனே விண்ணப்பிங்க
உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்படும் ரூ.50,000ஐ யார் பெறலாம்? எப்போது விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.
தமிழக பள்ளிக்கல்வி இயக்கநர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்லி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளக் கடிதத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியி்ல இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இணைப்பு 1ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் உயர் கல்வி பயில்வதற்கு க்லவிக் கட்டணத் தொகை (Tution Fees) தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களல் நிர்ணயிக்கப்டும் உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.50,000 இதில் எது குறைவோ, அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களல் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத் தொகை அல்லது 15,000 இதில் எது குறைவோ அத்தொகை துசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் இருந்து பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து உயர்கல்வி கட்டணத் தொகையை வழங்கப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து தொழில் நுட்பக் கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ள பார்வையில் கண்ட அரசாணை நகல் மற்றும் படிவம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இத்தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து ஆவு அலுவலர்களுக்கும் அரசு / ரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்பி சுற்றறிக்கை மூலம் ஆசிரியர் / ஆசிரியைகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள்பபடுகின்றனர்.
இப்படிப்புதவித் தொகை பெறும் விவரம் தெரியவில்லை என்று தெரிவிக்காத வண்ணம், எந்த விதமான புகாரும் எழாத வகையில் விழிப்புடன் செயல்படுமாறுமீண்டும் அறிவுறுத்தப்படுகன்றனர். மேலும் இத்தொழிற்கல்வி படிப்புதவித் தொகை குறித்து அலுவலக தகவல் பலகையில் விரிவான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து முழுமையான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று தொகுத்து இவ்வியக்கத்திற்கு 24 - 01 - 2025க்குள் அனுப்பி வைக்கும்படி அதை்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பற்று அனுப்பும் பேது கீழ்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொண்டு விவரங்களை சரிபார்த்து சான்றொப்பமிட்டு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் (மகன்/மகள்) அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபரியும் / ஓய்வு பெற்ற / பணியில் இருந்து இறந்த ஆசிரயரின் ஒரு குழந்தைக்கு ஒரு முறை மட்டும் கல்வி கட்ணத் தொகை வழங்கப்படும்.
அரசால் அங்கீகரிக்க்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தொகை வழங்கப்படும்.
மனுவில் உள்ள அனைத்து கலகங்களும் முழுமையான அளவில் சரியாக தமிழில் பூர்த்தி செய்திருத்ல் வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்டாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பெற்றோர்களின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.7,20,000 மிகாமல் இருக்க வேண்டும்.
தொழிற்கல்வி படிப்பில் கடைசியாக தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நக்லகள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறின்றி பெறப்படும் விண்ப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தந்தை அல்லது தாய் கணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக விண்ணப்பித்தில் ள்ள கலத்தில் பூர்த்தி செய்திருக்க் வேண்டும்.
தந்தை அல்லது தாய் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக விண்ணப்பத்தில் உள்ள கலத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தந்தை அல்லது தாய் ஆசிரியராக பணிபுரிந்தால் / பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் / இறந்து போன ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இப்படிப்புதவித் தொகை பெற தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.
ஆசிரிரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.
விண்ணப்பங்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24 - 01 - 2025.
ஏற்கனவே படிப்புதவித் தொகை ரூ.50,000 பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.
சார்ந்த மாணவ/மாணவியரின் வங்கி கணக்கு எண் சார்ந்த விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் பெற்று இணைக்க வேண்டும்.