சுற்றுச்சூழல் துறையில் சூப்பர் வேலை! டிகிரி இருந்தால் போதும்... மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு. எந்தப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 28,500 வரை. கடைசி தேதி: ஆகஸ்ட் 15, 2025. உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் பிரகாசமான எதிர்காலம்!
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசுப் பணி கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. மொத்தம் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் Project Associate, Senior Accountants, Personal Assistant போன்ற பதவிகள் அடங்கும். சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு 2025 ஜூலை 30 அன்று தொடங்கி, 2025 ஆகஸ்ட் 15 அன்று முடிவடைகிறது.
கல்வித் தகுதி மற்றும் சம்பள விவரங்கள்
Project Associate: இந்தப் பதவிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. எந்தத் துறையிலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ. 68,400 சம்பளமாக வழங்கப்படும்.
Senior Accountants: ஒரு காலியிடம் உள்ளது. B.Com/ B.A. Commerce/ Accountancy அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்புடன், Tally மென்பொருள் அறிவும் அவசியம். இவர்களுக்கும் மாதம் ரூ. 68,400 சம்பளம்.
Personal Assistant: இந்த உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. எந்தப் பட்டப்படிப்புடன் தட்டச்சு சான்றிதழ் (Typewriting Certificate from DTE) வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ. 28,500 சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை
விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்டிங் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://environment.tn.gov.in/] மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். அரசு வேலை கனவை நனவாக்க இது ஒரு அரிய வாய்ப்பு! தவறவிடாதீர்கள்!