Jobs: கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு! நல்ல சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Want a job in cooperative banks? Good news from the Tamil Nadu government: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025 ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma in Cooperative Management) தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Tamil Nadu Government Cooperative Bank Recruitment 2025
கூட்டுறவு நிறுவனங்களில் / சங்கங்களில் முறையான பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் மட்டுமே 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 01.05.2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .
Cooperative Bank Job
விண்ணப்பங்கள் Online மூலம் www.tncu.gov.tn.in என்ற இணையதள முகவரியில் 16.04.2025 முதல் 06.05.2025 அன்று மாலை 5.30 வரை விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் (Upload) செய்யவேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.05.2025 பிற்பகல் 5.30 மணி வரை மட்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-, பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 20750/ பயிற்சி காலம் : ஒராண்டு 2 பருவமுறைகள். புதிய பாடத்திட்டத்தின் படி தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
Job vacancy
தேர்வுகள் தமிழில் மட்டுமே கொள்குறி வினா அடிப்படையில் (Objective Type) நடத்தப்படும். பயிற்சி தொடங்கும் நாள் : 09.05.2025 ஆகும். பயிற்சி வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். விண்ணப்பம் மற்றும் பயிற்சி கட்டணம் ஆகியவை இணையதளம் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக 044-25360041 / 9444470013 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு ஆபத்தா? வேலை விசா ரத்து செய்ய திட்டம்!