டிகிரி முடிச்சிருந்தா போதும், உச்ச நீதிமன்றத்தில் வேலை! கைநிறைய சம்பளம்!!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 107 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தில் வேலை பார்க்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உடனே ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க.

Supreme Court Jobs 2024
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 107 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைத் தெரிந்துகொள்ளலாம்.
Supreme Court Personal Assistant Job
காலிப்பணியிடங்கள்: நீதிமன்ற மாஸ்டர் (Shorthand) 31, மூத்த தனி உதவியாளர் 33, தனி உதவியாளர் 43 என மூன்று பிரிவுகளில் மொத்தம் 107 காலிப்பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் நிரப்பப்படும்.
Supreme Court Jobs 2024
வயது வரம்பு: நீதிமன்ற மாஸ்டர் பணிக்கு 30 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மூத்த தனி உதவியாளர் பணிக்கு 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். தனி உதவியாளர் பணியில் சேர 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, ST, OBC பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
Supreme Court Recruitment 2024
கல்வித்தகுதி: நீதிமன்ற மாஸ்டர் பணிக்கு சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்து (Shorthand) பயிற்சி பெற்று, நிமிடத்திற்கு 120 சொற்களை எழுதும் திறன் இருக்க வேண்டும். இத்துடன் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். மூத்த தனி உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியம். நிமிடத்துக்கு 110 சொற்கள் எழுதும் திறனுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். தனி உதவியாளர் வேலைக்கு ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று, நிமிடத்துக்கு 100 சொற்கள் குறிப்பெடுக்கும் ஆங்கில சுருக்கெழுத்து (Shorthand) திறன் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது இந்த மூன்று பணிகளுக்கும் பொதுவான தேவை.
Supreme Court Shorthand Jobs
சம்பளம்: நீதிமன்ற மாஸ்டர் பணிக்கு ரூ.67,700 வரை சம்பளம் கிடைக்கும். மூத்த தனி உதவியாளர் பணியில் ரூ.47,600 வரை சம்பளமாகப் பெறலாம். தனி உதவியாளர் வேலைக்கு ரூ.44,900 வரை சம்பளம் தரப்படும்.
Personal Assistant Job in Supreme Court
தேர்வு முறை: கணினி தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்துத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வுகள் சென்னையில் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.sci.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. SC, ST பிரிவினரும் மாற்றுத்திறனாளிகளும் ரூ.250 செலுத்தினால் போதும்.
Supreme Court Recruitment Application Last Date
கடைசி நாள்: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.12.2024. தகுதித் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் வேலை பார்க்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உடனே ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க.