RRB Recruitment 2025: ரயில்வேயில் அரசு வேலை! 9900 காலிப்பணியிடங்கள்: இளைஞர்களே, ரெடியா?
ரயில்வேயில் 9900 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஏப்ரல் 10 முதல் மே 9 வரை வாய்ப்பு. முழு விவரங்கள் உள்ளே!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (RRBs), இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகின்றன. உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கு 9900 காலியிடங்களை அறிவித்துள்ளது. ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ்!
இதையும் படிங்க: டிகிரி முடித்தவர்களுக்கு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: TNPDCL Recruitment
முக்கிய விவரங்கள்:
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 10 ஏப்ரல் 2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 9 மே 2025
- மொத்த காலியிடங்கள்: 9900
- சம்பளம்: 7வது சம்பளக் குழுவின்படி மாதம் ரூ.19,900/-
- வயது வரம்பு: 01 ஜூலை 2025 தேதியின்படி 18 முதல் 30 வயது வரை.
- மருத்துவத் தகுதி: A-1 (உயர் உடல் ஆரோக்கியம்)
விண்ணப்பிக்கும் முறை:
- ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.rrbchennai.gov.in/ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
முக்கிய குறிப்புகள்:
- விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்கள் விவரங்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
- ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட்டில் உள்ள விவரங்களுடன் 100% பொருந்த வேண்டும்.
- ஆதார் விவரங்களில் மாற்றம் தேவைப்பட்டால், விண்ணப்பிக்கும் முன்பு திருத்தி கொள்ளவும்.
- ஆதார் அடையாளம் (கைரேகை மற்றும் கண் கருவிழிகள்) பதிவு செய்யப்பட வேண்டும்.
இளைஞர்களே, இது உங்களுக்கான வாய்ப்பு!
ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. 9900 காலியிடங்கள் இருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும். எனவே, இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும் விவரங்களுக்கு, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் தேர்வு முறை பற்றி அறிய, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவது மிகவும் நல்லது.