- Home
- Career
- RBI Jobs Without Exam: தேர்வு கிடையாது.. ரிசர்வ் வங்கியில் மாசம் ரூ.1.5 லட்சம் சம்பளத்துடன் காத்திருக்கும் வேலை
RBI Jobs Without Exam: தேர்வு கிடையாது.. ரிசர்வ் வங்கியில் மாசம் ரூ.1.5 லட்சம் சம்பளத்துடன் காத்திருக்கும் வேலை
RBI Jobs Without Exam: இந்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு துறைகளில் யங் புரொஃபஷனல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த வாய்ப்பு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

RBI Jobs Without Exam
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, இளைஞர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு துறைகளில் திறமையான இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
எந்தெந்த துறைகளில் வாய்ப்பு?
செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, நிதிச் சந்தை ஆய்வு, கொள்கை ஆராய்ச்சி, இணையப் பாதுகாப்பு மற்றும் நிலை நிதி உள்ளிட்ட பல துறைகளில் யங் புரொஃபஷனல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் மும்பையில் உள்ள ஆர்பிஐ தலைமை அலுவலகத்தில் செயல்படும்.
வயது மற்றும் தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிப்பது அவசியம்.
மாதம் ரூ.1.5 லட்சம்
இந்த பணியிடங்கள் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் நிரந்தர ஸ்டைஃபண்ட் வழங்கப்படும். உயர்ந்த வருமானம் மற்றும் மதிப்புமிக்க நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு என்பதால் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பம்
இந்த ஆட்சேர்ப்பில் எழுத்துத் தேர்வு இல்லை. முதற்கட்ட தகுதி சரிபார்ப்பு, ஆவணப் பரிசோதனை மற்றும் நேர்காணல் மூலமாகவே இறுதித் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

