- Home
- Career
- சோலி முடிஞ்சுது: LinkedInக்கு பெரிய ஆப்பு: ஓப்பன்ஏஐ-ன் அடுத்த அதிரடி! இனி வேலை ஈஸியாக கிடைக்கும்!
சோலி முடிஞ்சுது: LinkedInக்கு பெரிய ஆப்பு: ஓப்பன்ஏஐ-ன் அடுத்த அதிரடி! இனி வேலை ஈஸியாக கிடைக்கும்!
OpenAI, லிங்க்டினுக்குப் போட்டியாக, புதிய AI வேலைவாய்ப்பு தளத்தை 2026-ல் தொடங்க உள்ளது. AI சான்றிதழ் திட்டங்கள் மூலம் வேலைகளை உருவாக்கி, நிறுவனங்களை ஊழியர்களுடன் இணைக்கும்.

AI-யும், புதிய வேலைவாய்ப்புகளும்!
"ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவு, வேலைகளைப் பறிக்கும் ஒரு தொழில்நுட்பம் என்ற அச்சம் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. 2030-க்குள் லட்சக்கணக்கான வெள்ளை காலர் வேலைகள் இதனால் அழியும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால், ChatGPT-யை உருவாக்கிய OpenAI நிறுவனம், இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 2026-ன் மத்தியில், AI-யால் இயங்கும் ஒரு புதிய வேலைவாய்ப்பு தளத்தை (AI-powered jobs platform) அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான LinkedIn-க்கு நேரடியாக சவால் விடுகிறது.
OpenAI-யின் வேலைவாய்ப்புத் தளம் - சிறப்பு அம்சங்கள் என்ன?
புதிய வேலைவாய்ப்பு தளத்தின் முக்கிய நோக்கம், நிறுவனங்களின் தேவைகளையும், ஊழியர்களின் திறமைகளையும் AI உதவியுடன் துல்லியமாகப் பொருத்துவதுதான் என OpenAI-யின் அப்ளிகேஷன்களின் தலைமைச் செயல் அதிகாரி பிட்ஜி சிமோ (Fidji Simo) தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தளம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, சிறிய நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கும், AI திறமை கொண்ட பணியாளர்களை கண்டறிய உதவும். இந்த நடவடிக்கை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான LinkedIn உடன் OpenAI-யை நேரடியாக போட்டிக்கு நிறுத்துகிறது. இந்த போட்டி சுவாரஸ்யமாக இருக்கும், ஏனெனில் மைக்ரோசாஃப்ட் தான் OpenAI-யின் மிகப்பெரிய முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
OpenAI அகாடமி: புதிய திறன்களை மேம்படுத்தும் திட்டம்!
வேலைவாய்ப்புத் தளத்துடன், OpenAI அகாடமி மூலம் தொழிலாளர்களுக்கு AI திறன்களை கற்றுக்கொடுக்கவும் சான்றிதழ்கள் வழங்கவும் OpenAI திட்டமிட்டுள்ளது. இந்த சான்றிதழ் திட்டங்கள், வேலை தேடுவோருக்கு தங்களது AI திறன்களை முதலாளிகளுக்கு நிரூபிக்க உதவும். வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்து 2025-ன் இறுதியில் ஒரு முன்னோட்டத் திட்டத்தை தொடங்கவுள்ளதாகவும், 2030-க்குள் ஒரு கோடி அமெரிக்கர்களுக்கு AI சான்றிதழ் வழங்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்முயற்சிகள், AI-யால் ஏற்படும் வேலை இழப்புகளை, புதிய வேலை வாய்ப்புகளாக மாற்றும் நோக்கத்தை கொண்டுள்ளன.
பயங்களை சமநிலைப்படுத்துதல்!
AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் Anthropic நிறுவனத்தின் CEO, 2030-க்குள் 50% நுழைவு நிலை வேலைகள் அழியலாம் என எச்சரித்துள்ளார். இந்த அபாயத்தை உணர்ந்தே OpenAI, இந்த வேலைவாய்ப்புத் தளத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறுகிறது. AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், தொழிலாளர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுத்து, அவர்களை வேலைக்குத் தயார்படுத்துவது தங்கள் கடமை என OpenAI நம்புகிறது. OpenAI-ன் இந்த புதிய தளம், வேலை இழப்பு குறித்த அச்சத்தை நீக்கி, எதிர்காலத்திற்குத் தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.