டிகிரி முடிச்சிருந்தா போதும்.. NCERT-யில் கொட்டிக் கிடக்கும் டெக்னிக்கல் பணிகள்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCERT, இந்தியா முழுவதும் 173 கற்பித்தல் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. குரூப் ஏ, பி, சி பிரிவுகளில் உள்ள இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் ncert.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NCERT வேலைவாய்ப்பு
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), அதன் தலைமையகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 173 கற்பித்தல் அல்லாத (Non-Teaching) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
பணியிட விவரங்கள்
இந்த வேலைவாய்ப்பு குரூப் ஏ, பி மற்றும் சி (Group A, B, C) ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இதில் சூப்பரிடெண்டிங் இன்ஜினியர், புரொடக்ஷன் ஆபீசர், பிசினஸ் மேனேஜர், அசிஸ்டென்ட் இன்ஜினியர், சீனியர் அக்கவுண்டன்ட், ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், புரொடக்ஷன் அசிஸ்டென்ட், கேமராமேன், டெக்னீஷியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் மட்டுமே செலுத்த முடியும். கட்டணம் ஒருமுறை செலுத்தப்பட்டால் திரும்பப் பெறப்படாது.
• பொதுப்பிரிவு/OBC/EWS (Level 10-12): ஒவ்வொரு பணிக்கும் ₹1,500.
• பொதுப்பிரிவு/OBC/EWS (Level 6-7): ஒவ்வொரு பணிக்கும் ₹1,200.
• பொதுப்பிரிவு/OBC/EWS (Level 2-5): ஒவ்வொரு பணிக்கும் ₹1,000.
• SC / ST / PwBD / முன்னாள் ராணுவத்தினர்: கட்டணம் ஏதுமில்லை.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் ncert.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16 ஜனவரி 2026.
1. இணையதளத்தின் 'Vacancies' பகுதிக்குச் சென்று அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
2. 'Apply Here' என்பதைத் தேர்ந்தெடுத்து, புதிய பயனராக (New User) பதிவு செய்யவும்.
3. பதவி பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் மூலம் OTP பெற்று பதிவு செய்யவும் .
4. பின்னர் லாகின் செய்து, கல்வித் தகுதி மற்றும் முகவரி விவரங்களைப் பூர்த்தி செய்து, புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
5. கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின், அதன் நகலை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கவும்.
நேரடிப் போட்டித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

