MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Vacancy: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி?

Job Vacancy: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ரயில்வே நிதி கழகம் 23 காலியிடங்களை அறிவித்துள்ளது. வணிகம் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்ற தகுதியானவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இந்த நிரந்தர அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 06 2026, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 நிதி துறையில் கல்வி பெற்றவர்களுக்கு பொற்கால வாய்ப்பு
Image Credit : Getty

நிதி துறையில் கல்வி பெற்றவர்களுக்கு பொற்கால வாய்ப்பு

மத்திய அரசுத் துறையில் நல்ல சம்பளத்துடன் நிரந்தர வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்திய ரயில்வே நிதி கழகமான IRFC (Indian Railway Finance Corporation Limited) தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, Assistant மற்றும் Assistant Manager (Finance) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. வணிகம் மற்றும் நிதி துறையில் கல்வி பெற்றவர்களுக்கு இது ஒரு பொற்கால வாய்ப்பாகும்.

26
இந்திய முழுவதும் பணியாற்றலாம்.!
Image Credit : Getty

இந்திய முழுவதும் பணியாற்றலாம்.!

இந்த அறிவிப்பு (Advt. No. 01/2026) 04 ஏப்ரல் 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் Assistant (NE5 Level) 16 பணியிடங்களும், Assistant Manager (Finance) – E1 Level 7 பணியிடங்களும் அடங்கும். இந்தியா முழுவதும் பணியமர்த்தல் நடைபெறும் என்பதால், நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Articles

Related image1
சென்னையில் சக்கைப்போடு போடும் கிளவுட் கிச்சன் பிசினஸ் – ஆயிரத்தில் முதலீடு, லட்சத்தில் வருமானம்..
Related image2
5 லட்சம் பட்ஜெட், 800 மில்லியன் வியூஸ், 3 கோடி வருமானம்.! தமிழ் மட்டுமல்ல இந்தியாவையே ஆட்டி படைக்கும் ஹிட்டு சாங்.!
36
கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள்
Image Credit : social media

கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள்

Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Com பட்டப்படிப்புடன் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ICMAI அல்லது ICAI மூலம் Intermediate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant Manager (Finance) பணிக்கு B.Com உடன் CA/CMA அல்லது MBA (Finance)/PGDM (Finance) தகுதி அவசியம்.

46
லட்சக்கணக்கில் சம்பளம் காத்திருக்கு.!
Image Credit : Getty

லட்சக்கணக்கில் சம்பளம் காத்திருக்கு.!

வயது வரம்பு இரு பணிகளுக்கும் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/ST, OBC, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது தளர்வு வழங்கப்படும். சம்பளத்தைப் பொருத்தவரை Assistant பணிக்கு ரூ.21,000 முதல் ரூ.74,000 வரை வழங்கப்படும். Assistant Manager பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை உயர்ந்த சம்பளம் வழங்கப்படும்.

56
 கணினி அடிப்படையிலான தேர்வு
Image Credit : Google

கணினி அடிப்படையிலான தேர்வு

தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். விண்ணப்பக் கட்டணம் SC/ST/Ex-Servicemen/PWD விண்ணப்பதாரர்களுக்கு இல்லை. மற்றவர்களுக்கு ரூ.500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

66
உடனே விண்ணப்பிக்கனும் மக்களே.!
Image Credit : Google

உடனே விண்ணப்பிக்கனும் மக்களே.!

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 04.04.2026 முதல் 01.05.2026 இரவு 11.45 மணி வரை IRFC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்விற்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தேர்வு ஜூன் 2026ல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடாமல், தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து உங்கள் அரசு வேலை கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு வேலை மட்டும் இல்ல… இந்த வேலைகளில் லட்சம் சம்பளம்!
Recommended image2
Interview மட்டும் கிளியர் பண்ணுங்க… Bank Job உங்களுக்கே! சம்பளத்தை அள்ளிக்கொடுக்குறாங்க.!
Recommended image3
Job Alert: தமிழ் தெரிந்தால் ரூ.85,000 வரை சம்பளம்! வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
சென்னையில் சக்கைப்போடு போடும் கிளவுட் கிச்சன் பிசினஸ் – ஆயிரத்தில் முதலீடு, லட்சத்தில் வருமானம்..
Recommended image2
5 லட்சம் பட்ஜெட், 800 மில்லியன் வியூஸ், 3 கோடி வருமானம்.! தமிழ் மட்டுமல்ல இந்தியாவையே ஆட்டி படைக்கும் ஹிட்டு சாங்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved