Southern Railway Job: தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு! 10ம் வகுப்பு படித்தாலே போதும்! கை நிறைய சம்பளம்!
Southern Railway Recruitment: தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள 67 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஓட்ட பந்தயம், செஸ், பளு தூக்குதல், கூடைபந்து, குத்து சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட பிரிவு வீரர்கள் (பெண்/ஆண்கள்) இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
காலி பணியிடங்கள் விவரம்:
ரயில்வே பணியில் நிலை 1- 46 காலி பணியிடங்கள், நிலை 2 மற்றும் 3 - 16 காலி பணியிடங்கள் மற்றும் நிலை 4 மற்றும் 5 - 5 காலி பணியிடங்கள் என மொத்தம் 67 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 10ம் வகுப்பு முதல் அதிகபட்சமாக பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெவல்-1 விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். லெவல் 2 மற்றும் 3 விளையாட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். லெவல் 4 மற்றும் 5 பிரிவுக்கு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: Southern Railway: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வயது வரம்பு:
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களான EWS மற்றும் பொதுப் பிரிவினர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது அடிப்படையில் தகுதியானவர்கள் ஜனவரி 1, 2025 முதல் தீர்மானிக்கப்படுவார்கள். மற்ற பிரிவினர்களுக்கு வயது வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளின் படி தளர்வுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி, மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய (EWS) பிரிவினர்களுக்கு 500 ரூபாய் விண்ணப் கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும்.
சம்பளம் விவரம்:
தெற்கு ரயில்வேயின் இப்பணியிடங்களுக்கு நிலை 1 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18,000, நிலை 2 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.19,900, நிலை 3 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21,700, நிலை 4 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.25,500 மற்றும் நிலை 5 குறைந்தபட்சம் சம்பளமாக ரூ.29,200 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி:
ரயில்வே பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 7ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேசி அக்டோபர் 6ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு முறை:
தெற்கு ரயில்வே விளையாட்டு கோட்டா பிரிவில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு எழுத்துத் தேர்வை காட்டிலும், உடல்மொழித் தேர்வுகள் தான் இருக்கும். அதன்படி 4 கட்டங்களாக வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யபட உள்ளனர். விளையாட்டு சோதனை தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடைசியாக மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்கும் முறை
தெற்கு ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு இடங்களுக்கு https://iroams.com/ என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.