MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • எழுத்துத் தேர்வு இல்லாமல் அரசு வேலை.. ஐஆர்சிடிசி வேலைக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.. முழு விபரம் இதோ

எழுத்துத் தேர்வு இல்லாமல் அரசு வேலை.. ஐஆர்சிடிசி வேலைக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.. முழு விபரம் இதோ

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 26 2026, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
எழுத்துத் தேர்வு இல்லாத வேலை
Image Credit : google

எழுத்துத் தேர்வு இல்லாத வேலை

அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தற்போது 43 Hospitality Monitor பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முக்கிய சிறப்பு என்னவென்றால், எழுத்துத் தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தலாம்.

இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இத்துடன் சேர்த்து விதிமுறைகளின்படி அலவன்ஸ் மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக அமையலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Sc (Hospitality & Hotel Administration) அல்லது BBA/MBA (Culinary Arts) அல்லது B.Sc (Hotel Management & Catering Science) அல்லது MBA (Tourism & Hotel Management) போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இதற்குப் பிறகும் ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
ஐஆர்சிடிசி வேலை வாய்ப்பு
Image Credit : Asianet News

ஐஆர்சிடிசி வேலை வாய்ப்பு

இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 21 ஜனவரி 2026 தேதியின்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விதிகள்படி வயது தளர்வு வழங்கப்படும். அதன்படி SC/ST-க்கு 5 ஆண்டுகள், OBC-க்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு கிடைக்கும்.

நேர்காணல் பல நகரங்களில் நடைபெறுகிறது. போபால் – பிப்.17, மும்பை – பிப்.24, கோவா (போர்வோரிம்) – பிப்.27, அகமதாபாத் – மார்ச் 5 என தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேருவதற்கு முன் ரூ.25,000 பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
வேலைவாய்ப்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Training: 8th முடித்தவர்களும் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! 30 நாள் பயிற்சிக்கு பின் வேலை கன்பார்ம்.! எங்க நடக்குது தெரியுமா?
Recommended image2
D-Mart Shopping: ரூ.2,000 பட்ஜெட்டில் மளிகைப் பொருட்கள் வாங்குவது எப்படி? பணத்தை மிச்சப்படுத்தும் டிப்ஸ்!
Recommended image3
8TH PAY COMMISSION: சம்பளம் எத்தனை மடங்கு உயரும்? 8-வது ஊதியக் குழுவின் சமீபத்திய ஸ்டேட்டஸ்.!
Related Stories
Recommended image1
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை.. மருத்துவமனை லிஸ்ட் பார்ப்பது எப்படி? முழு விபரம் இங்கே
Recommended image2
எஸ்பிஐயில் ரூ.80 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. டிகிரி போதும்! ஆனா ஒரு கண்டிஷன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved