IIT Madras Recruitment: ஐஐடியில் சூப்பர் வேலை வாய்ப்பு! மாதம் ரூ.60,000 சம்பளம்!
சென்னை ஐஐடியில் மூத்த நிர்வாகி பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி டிசம்பர் 15.
IIT Madras
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனம். இந்த பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி, அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி தொழில் முனைவு மற்றும் தொழில் துறை ஆலோசனை ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 550 ஆசிரியர்கள், 8000 மாணவர்கள் மற்றும் 1250 நிர்வாக துணை ஊழியர்களை கொண்டது.
IIT Job
இந்நிலையில் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ் IC&SR (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) கீழ் மூத்த நிர்வாகி பதவிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
Educational qualification
கல்வித்தகுதி :
சீனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் அல்லது பிற அறிவியலில் எம்எஸ்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பி.டெக், பி.இ. அல்லது எம்சிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் துறையில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Salary
கட்டணம் :
இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
மாத சம்பளம் :
சீனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதச் சம்பளமாக ரூ. 60,000 பெறுவார்கள். இருப்பினும் இது அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும்.
Madras IIT Job
விண்ணப்பிக்க கடைசி தேதி:
டிசம்பர் 15
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் நடத்தப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://icandsr.iitm.ac.in/recruitment/ க்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் போது உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றுவது கட்டாயமாகும்.