MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ஆரம்பமே லட்சத்தில் சம்பளம்.. இந்தியாவில் டாப் 4 லிஸ்டில் உள்ள அரசு பணிகள் என்னென்ன தெரியுமா?

ஆரம்பமே லட்சத்தில் சம்பளம்.. இந்தியாவில் டாப் 4 லிஸ்டில் உள்ள அரசு பணிகள் என்னென்ன தெரியுமா?

Government Jobs : இந்தியாவில் ஒரு சில அரசு பணிகளில், ஆரம்பத்திலேயே லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் பணிகளும் உள்ளது.

2 Min read
Ansgar R
Published : Sep 17 2024, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RBI grade b officer

RBI grade b officer

கால் காசு வருமானம் என்றாலும் அரசு வருமானமாக இருக்கே வேண்டும், இந்த பழமொழிக்கு இப்போதும் மவுசு உண்டு. என்னதான் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் வேலை செய்தாலும், அரசு பணிக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இன்றைய காலகட்டத்தில் பென்ஷன் என்ற ஸ்கிம் இல்லை என்றாலும், அரசு வேலைக்காக போட்டியிடும் இளைஞர்களின் அளவு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம். சரி இந்த பதிவில், இந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் சில அரசு பணிகளை பற்றி பார்க்கலாம். 

ரிசர்வ் வங்கியில் கிரேட் B பணிகள் 

குறிப்பிடத்தக்க பொறுப்புகளுடன் ஒரு மதிப்புமிக்க பணியை வழங்குகிறது இந்த வேலை. ஒவ்வொரு ஆண்டும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் உள்ள அதன் பல கிளைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக ஆர்பிஐ கிரேடு பி தேர்வை நடத்துகிறது. இந்தியாவில் நடத்தப்படும் மிக மிக கடினமான வாங்கி தேர்வுகளில் இதுவும் ஒன்று.

எஸ்பிஐ வங்கியில் மெகா வேலை வாய்ப்பு ஆஃபர்: 1511 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

24
SSC CGL 2024

SSC CGL 2024

SSC CGL Exam 

(SSC CGL அல்லது CGLE) என்பது இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு குரூப் பி மற்றும் சி அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வாகும். இதற்கான தேர்வு நான்கு முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது, அவை வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகின்றன. 

இந்திய அளவில் நடத்தப்படும் கடுமையான தேர்வுகளில் இதுவும் ஒன்று, இந்த தேர்வுகளை எழுதி தேர்ச்சிபெறுபவர்களும் குறைந்தபட்சம் 26,000 ரூபாய் முதல் 1,77,000 வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றது.

34
SSC Sub Inspector

SSC Sub Inspector

SSC Sub Inspector Exam 

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த Sub Inspector பதிவுக்கான தேர்வுகளில் மிக மிக கடுமையான தேர்வுகளாகும். இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் தில்லி காவல்துறை, CAPF (மத்திய ஆயுதக் காவல் படைகள்) மற்றும் CISF (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைகள்) க்கு உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் (ASI) ஆகியோருக்கு சப் இன்ஸ்பெக்டர்களை நியமிக்க நடத்தப்பட்டது. வருடத்திற்கும் சுமார் 5 முதல் 7 லட்சம் வரை இந்த பதவிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

44
LIC AAO

LIC AAO

LIC AAO Exam 

AAOன் முழு வடிவம் "உதவி நிர்வாக அதிகாரிகள்" என்பதாகும். எல்ஐசி, தங்களது காப்பீட்டு நிறுவனத்திற்கு எடுக்கும் பல பணிகளில் இது முக்கியமானதாகும். ஆனால் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மட்டுமே இவை நடத்தப்படுகிறது. மாதத்திற்கு 53,000 முதல் 1,00,000 ரூபாய் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது.

8வது படித்திருப்பவர்களுக்கும் வேலை.! தமிழக அரசின் சூப்பர் திட்டம்- என்ன தெரியுமா.?

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved