MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • வங்கியில் பணியாற்ற ஆசையா? எக்ஸிம் வங்கியில் அசத்தலான வேலை வாய்ப்புகள்!

வங்கியில் பணியாற்ற ஆசையா? எக்ஸிம் வங்கியில் அசத்தலான வேலை வாய்ப்புகள்!

ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியில் மேலாண்மை பயிற்சி மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 Min read
Suresh Manthiram
Published : Apr 11 2025, 05:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வங்கித் துறையில் பணியாற்ற ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்காக ஒரு சூப்பர் செய்தி! இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியில் பல்வேறு புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திறமையான பட்டதாரிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலாண்மை பயிற்சி (Management Trainee) மற்றும் துணை மேலாளர் (Deputy Manager) போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 15, 2025. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

விளம்பர எண்: HRM/MT/DM/CM/2025-26/01

25

பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:

  1. பணி: Management Trainee

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:

  • Digital Technology: 10
  • Research Analysis: 5
  • Rajbhasha: 2
  • Legal: 5

சம்பளம்: மாதம் ₹ 65,000

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • Digital Technology: 60% மதிப்பெண்களுடன் Computer Science, Information Technology, Electronics and Communication பிரிவில் பி.இ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research Analysis: 60% மதிப்பெண்களுடன் பொருளாதார பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Rajbhasha: Hindi/English பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Legal: 60% மதிப்பெண்களுடன் சட்டம், எல்எல்பி -இல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

35

2. பணி: Deputy Manager

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:

  • Legal: 4
  • Deputy Compliance Officer: 1

சம்பளம்: மாதம் ₹ 48,480 - 85,920

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • Legal: 60% மதிப்பெண்களுடன் சட்டம், எல்எல்பி தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Compliance Officer: ஐசிஎஸ்ஐ -இல் Associate Membership இருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்பிஏ, எல்எல்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
45
  1. பணி: Chief Manager

காலியிடம்: 1

  • சம்பளம்: மாதம் ₹ 85,920 - 1,05,280
  • கல்வி தகுதி: ஐசிஎஸ்ஐ -இல் Associate Membership ஆகவும், இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்பிஏ, எல்எல்பி தேர்ச்சியும், 10 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை.

    வயது வரம்பு சலுகைகள்:

    உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

    தேர்வு முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பக் கட்டணம்:

  • பொது (General), ஓபிசி (OBC) பிரிவினர்: ₹ 600
  • எஸ்சி (SC), எஸ்டி (ST), மாற்றுத்திறனாளிகள் (PWD), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) மற்றும் பெண்கள்: ₹ 100.
  • கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

55

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எக்ஸிம் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.eximbankindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2025

ஆகவே, வங்கித் துறையில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். கடைசி தேதி நெருங்கி வருவதால், உடனடியாக எக்ஸிம் வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பித்து உங்கள் கனவு வேலையை அடையுங்கள்!

இதையும் படிங்க: ரூ. 1.7 இலட்சம் சம்பளம்: 10th , 12th , டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் செம வேலை!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved