ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேலை ரெடி.! சம்பளம் 71ஆயிரம்- விண்ணப்பிப்பது எப்படி.?
Panchayat union jobs : ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 30, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேலை
அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். எனவே தமிழகத்தில் அரசு பணியில் இணையும் வகையில் அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலிப்பணியிடம் நிரப்பபடவுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கொடுமுடி, நம்பியூர்,கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்
பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant) - 6 பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தகுதி: 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் 58,100 வரை வழங்கப்படும்.
பணி: பதிவறை எழுத்தர் (Record Clerk) - 2
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: இரவு காவலர் (Night Watchman) - 4 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100வரை தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணியாளர் தேர்வுக்கான தகுதிகள் என்ன.?
பணி: வாகன ஓட்டுநர் (Jeep Driver) - 2 பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தகுதி: 8-ஆம்வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500-71,900
முக்கிய தகுதி ; விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தாலுகாவில் அல்லது ஊராட்சி ஒன்றிய பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி.?
வயது வரம்பு: பொதுப் பிரிவினர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதர அனைத்து பிரிவினர் ரூ.100. கட்டணம், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு ரூ.50 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வருகிற 30.09.2025 தேதிக்கு முன் ஆன்லைனில் அனுப்பவும்.