டிகிரி, டிப்ளமோ முடித்தவரா? மத்திய அரசு நிறுவனமான ECIL-லில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு!
மத்திய அரசின் பாரத மின்னணுவியல் கழகத்தில் (ECIL) டெக்னீஷியன், சூப்பர்வைசர், புராஜெக்ட் இன்ஜினியர் உள்ளிட்ட 24 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பி.இ/பி.டெக் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மின்னணுவியல் கழகத்தில் (Electronics Corporation of India Limited - ECIL) காலியாக உள்ள டெக்னீஷியன் மற்றும் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு, தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி
இந்த அறிவிப்பின்படி பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
• டெக்னீஷியன் (Technician): 13 பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும்.
• சூப்பர்வைசர் மற்றும் டிராப்ட்ஸ்மேன் (Supervisor & Draftsman): 7 பணியிடங்கள் உள்ளன (5 சூப்பர்வைசர் மற்றும் 2 டிராப்ட்ஸ்மேன்). இதற்கு டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• புராஜெக்ட் இன்ஜினியர் (Project Engineer): 4 பணியிடங்கள் உள்ளன. இதற்கு பி.இ (BE) அல்லது பி.டெக் (B.Tech) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் வயது வரம்பு
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 30,000 முதல் ரூ. 55,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
• டெக்னீஷியன், சூப்பர்வைசர் மற்றும் டிராப்ட்ஸ்மேன் பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும்.
• புராஜெக்ட் இன்ஜினியர் பணிக்கு அதிகபட்சமாக 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
• அரசு விதிகளின்படி ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test), தொழிற்முறைத் தேர்வு (Trade Test), திறன் தேர்வு (Skill Test), வாய்மொழித் தேர்வு (Viva) மற்றும் நேர்காணல் (Personal Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
தகுதியுள்ளவர்கள் ECIL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முன் கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று, புகைப்பட நகல் மற்றும் இதர ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்ளவும். ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, எதிர்காலத் தேவைக்காக விண்ணப்ப எண்ணைக் குறித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20-01-2026
மேலதிக விவரங்களுக்கு ecil.co.in என்ற ECIL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

