MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தமிழக அரசு வேலையில் சேர ஆசையா? இந்த தேர்வு ரொம்ப முக்கியம்: மிஸ் பண்ணிடாதிங்க… Computer On Office Automation

தமிழக அரசு வேலையில் சேர ஆசையா? இந்த தேர்வு ரொம்ப முக்கியம்: மிஸ் பண்ணிடாதிங்க… Computer On Office Automation

தமிழ்நாடு அரசின் அலுவலக தானியங்கி படிப்புடன் அலுவலக automation-ல் சான்றிதழ் பெறுங்கள். இதன் முக்கியத்துவம், விண்ணப்ப செயல்முறை மற்றும் தொழில் நன்மைகள் பற்றி அறியவும்

2 Min read
Author : Suresh Manthiram
Published : Apr 16 2025, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ்நாடு அரசு வேலைகளில் சேர தானியங்கி கணினி சான்றிதழ் மிக முக்கியமாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், அலுவலக தானியங்கி கணினி சான்றிதழ் (Certificate Course in Computer On Office Automation) படிப்புக்கு ஆகஸ்ட் 2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படிப்பு, அரசு ஆணை எண்.44, உயர்கல்வி (பி1) துறை, நாள்: 14.03.2025-ன் படி நடத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

Certificate Course in Computer On Office Automation முக்கிய தேதிகள் (tentative):

விண்ணப்ப அறிவிப்பு வெளியீடு: 13.04.2025.

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 16.04.2025 (www.tndtegteonline.in).

ஆன்லைன் விண்ணப்பம் முடியும் தேதி: 11.05.2025.

Theory தேர்வு: 07.06.2025.

Practical தேர்வு: 08.06.2025 முதல்.

தேர்வு முடிவு வெளியீடு: 17.07.2025.

குறிப்பு: தேதிகள் மாற்றத்திற்குரியவை. தகவல்களுக்கு www.dte.tn.gov.in அல்லது www.tndtegteonline.in என்ற இணையதளங்களைப் பார்க்கவும்.

36

Certificate Course in Computer On Office Automation கல்வித் தகுதி:

தமிழ்நாடு மாநில எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறையின் இளைய நிலை தட்டச்சுத் தேர்ச்சி (தமிழ்/ஆங்கிலம்) அல்லது மூத்த நிலை தட்டச்சுத் தேர்ச்சி (தமிழ்/ஆங்கிலம்).

46

Certificate Course in Computer On Office Automation தேர்வு விவரங்கள்:

தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது: Theory மற்றும் Practical.

Practical தேர்வுக்கு, மாணவர்கள் Record Note-book சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறும்.

56

Certificate Course in Computer On Office Automation விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம்:

ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம்: ரூ.30.

தேர்வு கட்டணம்: ரூ.1000.

மொத்த கட்டணம்: ரூ.1030 (ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் திரும்பப் பெறப்படாது).

இதையும் படிங்க: 12வது பாஸ் போதும்! மத்திய அரசு வேலை ரெடி! இளநிலை உதவியாளர் - சம்பளம் ₹63,200 வரை!

66

Certificate Course in Computer On Office Automation தேர்வின் முக்கியத்துவம்:

இந்த அலுவலக தானியங்கி கணினி சான்றிதழ் படிப்பு, இன்றைய நவீன வேலைச் சந்தையில் ஒரு முக்கிய திறனாக கருதப்படுகிறது. அலுவலகங்களில் கணினி பயன்பாடு பெருகிவிட்ட நிலையில், இந்த சான்றிதழ் பெற்றிருப்பது வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அலுவலக உதவியாளர், தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சுயதொழில் செய்பவர்களுக்கும் தங்கள் அலுவலக பணிகளை திறம்பட செய்ய இந்த படிப்பு உதவும்.

முக்கிய அறிவுறுத்தல்கள்:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதியில் தேவையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு மையம் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Practical தேர்வுக்கு மாணவர்கள் கணினி கொண்டு வரத் தேவையில்லை.

புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது தொப்பி அல்லது கூலிங் கிளாஸ் அணிந்திருக்கக் கூடாது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved