- Home
- Career
- மாணவர்களே தயாரா?... CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஷெட்யூல் வெளியானது! செக் பண்ணுங்க!
மாணவர்களே தயாரா?... CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஷெட்யூல் வெளியானது! செக் பண்ணுங்க!
CBSE Board Exam 2026 Schedule Out CBSE 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உத்தேச அட்டவணை வெளியாகி உள்ளது. தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஜூலை 15 வரை நடைபெறும்.

பிப்ரவரி 17 முதல் தேர்வுகள் ஆரம்பம்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான உத்தேச தேதிகளை வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் ஜூலை 15, 2026 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகள் தற்போதைக்கு உத்தேசமானவை என்றாலும், மாணவர்கள் இப்போதிருந்தே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இது ஒரு முக்கியமான அறிவிப்பாகும்.
CBSE Board Exam 45 இலட்சம் மாணவர்களுக்கான பெரும் தேர்வு!
இந்த ஆண்டு CBSE தேர்வுகளுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில் இருந்து சுமார் 45 இலட்சம் மாணவர்கள் 204 பாடங்களில் தேர்வெழுத உள்ளனர். பிரதான தேர்வுகள் மட்டுமின்றி, 12ஆம் வகுப்பு விளையாட்டு மாணவர்களுக்கான தேர்வுகள், 10ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஆகியவையும் இந்த அட்டவணையின்படி நடத்தப்பட உள்ளன. எழுத்துத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி என அனைத்தும் உரிய நேரத்தில் நிறைவுபெறும் என CBSE தெரிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு முக்கியத் தேதிகள்: கால அட்டவணை இதோ!
மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 10ஆம் வகுப்புக்கான முக்கியத் தேர்வுகளின் தேதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
• கணிதம்: பிப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை
• ஆங்கிலம்: பிப்ரவரி 21, 2026, சனிக்கிழமை
• அறிவியல்: பிப்ரவரி 25, 2026, புதன்கிழமை
• கணினி அப்ளிகேஷன்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் (IT)/ AI: பிப்ரவரி 27, 2026, வெள்ளிக்கிழமை
• இந்தி: மார்ச் 2, 2026, திங்கட்கிழமை
• சமூக அறிவியல்: மார்ச் 7, 2026, சனிக்கிழமை
• தமிழ்: பிப்ரவரி 24, 2026, செவ்வாய்க்கிழமை
அனைத்துத் தேர்வுகளும் காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். மாணவர்கள் முழுமையான கால அட்டவணையை CBSE இணையதளத்தில் பார்த்து உறுதிசெய்து கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு முக்கியத் தேதிகள்: ஒரு பார்வை!
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கியப் பாடங்களின் தேர்வுத் தேதிகள் பின்வருமாறு:
• உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology): பிப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை
• இயற்பியல் (Physics): பிப்ரவரி 20, 2026, வெள்ளிக்கிழமை
• வியாபாரப் படிப்பு (Business Studies): பிப்ரவரி 21, 2026, சனிக்கிழமை
• புவியியல் (Geography): பிப்ரவரி 26, 2026, வியாழக்கிழமை
• வேதியியல் (Chemistry): பிப்ரவரி 28, 2026, சனிக்கிழமை
• கணிதம் (Mathematics): மார்ச் 9, 2026, திங்கட்கிழமை
• ஆங்கிலம் (English): மார்ச் 12, 2026, வியாழக்கிழமை
• பொருளாதாரம் (Economics): மார்ச் 18, 2026, புதன்கிழமை
• உயிரியல் (Biology): மார்ச் 26, 2026, வியாழக்கிழமை
• வரலாறு (History): மார்ச் 30, 2026, திங்கட்கிழமை
• சமூகவியல் (Sociology): ஏப்ரல் 4, 2026, சனிக்கிழமை
இத்தேர்வுகளும் காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும்.
தேர்வுக்குப் பிந்தைய செயல்முறைகள் - துரித மதிப்பீடு!
தேர்வுக்குப் பிந்தைய செயல்முறைகளை விரைவாக முடிக்க CBSE திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பாடத் தேர்வு முடிந்த 10 நாட்களுக்குப் பிறகு விடைத்தாள் மதிப்பீடு தொடங்கும் என்றும், அது அடுத்த 12 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு பிப்ரவரி 20, 2026 அன்று நடந்தால், விடைத்தாள் மதிப்பீடு மார்ச் 3 முதல் மார்ச் 15 வரை நடைபெறும். இதன் மூலம் தேர்வு முடிவுகள் உரிய காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் இந்த அட்டவணையைப் பயன்படுத்தி தங்கள் தேர்வுகளுக்கு இப்போதிருந்தே திட்டமிட்டு படிக்கத் தொடங்கலாம்.