வெளிநாட்டில் படித்து அங்கேயே செட்டில் ஆக ஆசையா? டாப் 10 நாடுகள் இதோ!
உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்பது இப்போது பல இந்தியர்களின் கனவாக உள்ளது. அத்தகையவர்களுக்கு எந்த நாட்டில் என்ன மாதிரியான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இந்திய மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

Study and work abroad
பெரும்பாலான இளைஞர்களின் விருப்பம் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வது. இந்தியாவில் பொறியியல் அல்லது பிற பட்டப்படிப்பு முடித்தவுடன் வெளிநாடு செல்ல தயாராகிறார்கள். இப்படி உயர்கல்விக்காக சென்று அங்கேயே குடியேற விரும்புபவர்கள் பலர் உள்ளனர். நம் தமிழ்நாட்டிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடு செல்கிறார்கள்.
Indian Students
சில மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வெளிநாடு சென்ற பிறகு சிரமப்படுகிறார்கள். எனவே நாம் எந்த நாட்டிற்கு செல்கிறோம்? அங்கு என்ன வசதிகள் உள்ளன? என்னென்ன கல்வி நிறுவனங்கள் உள்ளன? மாணவர் சேர்க்கை எப்படி நடக்கிறது? எந்த பிரச்சனையும் இல்லாமல் அங்கு கல்வி பயில்வது எப்படி? படிப்புக்குப் பிறகு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன? இதுபோன்ற விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு சென்றால் நல்லது.
Abroad job opportunities
இதுவரை இந்தியர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சில நாடுகளில் உயர்கல்வியை முடித்து வேலை செய்து வருகின்றனர். புதிதாக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களும் இதுபோன்ற நாடுகளை தேர்ந்தெடுத்தால் நல்லது. ஏற்கனவே நம் ஆட்கள் அங்கே இருப்பதால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தீர்க்க உதவி கிடைக்கும். எனவே, உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் பின்வரும் 10 நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
USA
அமெரிக்கா:
இந்திய மாணவர்களின் கனவு நாடு அமெரிக்கா. நம் ஆட்கள் உயர்கல்வி, வேலைக்காக அதிகமாக அமெரிக்காவிற்கே செல்கிறார்கள். அங்குள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட், ஸ்டான்போர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் படிக்க கனவு காண்கிறார்கள். உலகில் மிகவும் சக்திவாய்ந்த கரன்சி கொண்ட அமெரிக்காவில் வேலை கிடைத்தால் தங்கள் பொருளாதார நிலை மேம்படும் என்று நம்புகிறார்கள். அதனால் இந்தியாவில் நல்ல வேலைகள் இருந்தாலும் விட்டுவிட்டு அங்கு செல்கிறார்கள்.
கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு படிக்கும்போதே பகுதி நேர வேலை செய்யும் வசதியும் உள்ளது. படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை செய்து செட்டில் ஆகும் வாய்ப்பும் உள்ளது.
Germany
ஜெர்மனி :
இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு பொறியியல், ஐடி, அறிவியல் துறைகளில் நல்ல திறமை வாய்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் உயர்கல்விக்காக செல்லும் மாணவர்களுக்கு இங்கு கல்விக்கான செலவு மிகவும் குறைவு. குறைந்த செலவில் தரமான கல்வி கிடைக்கும். ஜெர்மனி பொருளாதார ரீதியாக மிகவும் வலுவாக உள்ளது. இதனால் அந்த நாட்டிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
Australia
ஆஸ்திரேலியா :
உலகில் நல்ல பல்கலைக்கழகங்கள் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இதனால், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து இங்கு உயர்கல்விக்காக அதிகமாக செல்கிறார்கள். மேலும் ஆஸ்திரேலியாவில் நல்ல வாழ்க்கை முறை இருப்பதால் பலர் இங்கேயே செட்டில் ஆக விரும்புகிறார்கள்.
Canada
கனடா :
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடா செல்வது மிகவும் எளிது. மிகவும் சுலபமாக இமிகிரேஷன் செயல்முறை முடிவடைகிறது. இங்கு வேலை வாய்ப்புகளும் அதிகம். இந்த நாடு திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கத் தயராகா இருக்கிறது. இதனால், கனடாவில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர்.
United Kingdom
பிரிட்டன்
உயர்கல்விக்கு உலகளாவிய தலைமை தாங்கும் நாடாக பிரிட்டன் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் உள்ளன. இங்கு படிப்புக்குப் பிறகு வேலை செய்யும் வாய்ப்பும் உள்ளது. அதனால்தான் இந்திய மாணவர்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.
Singapore
சிங்கப்பூர் :
சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிக்கு சிங்கப்பூர் மையமாக மாறியுள்ளது. இந்த நாடு வலுவான பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு வேலைகளைப் பெறுவது எளிது. உயர்கல்விக்காக செல்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.
Netherland
நெதர்லாந்து :
இந்த நாட்டில் தரமான கல்வி கிடைக்கிறது. அதனால்தான் இங்குள்ள கல்வி முறை உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இங்கு பல பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஆங்கிலத்திலேயே படிப்புகளை வழங்குகின்றன. உலகளாவிய மொழி ஆங்கிலத்தில் கல்வி கற்பதால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலைகள் எளிதாக கிடைக்கும். நெதர்லாந்தில் வேலை வாய்ப்புகளும் நன்றாக உள்ளன.
France
பிரான்ஸ் :
கலாச்சாரம், கலை மற்றும் ஃபேஷனுக்கு பிரான்ஸ் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. இந்த துறைகளுக்கு இங்கு கல்வி முறையில் முக்கியத்துவம் உள்ளது. மேலும் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.
Ireland
அயர்லாந்து :
முழுமையாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று. இங்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்பம், மருந்து துறைகளில் உள்ளவர்களுக்கு அயர்லாந்தில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.
New Zealand
நியூசிலாந்து :
இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இந்த நாடு இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது... எனவே வாழ்க்கை முறை மிகவும் நன்றாக இருக்கும். திறமையான தொழில்முறை வேலைகளுக்கு இங்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்த துறைகளில் உள்ளவர்களுக்கு இங்கு செல்வதற்கான இமிகிரேஷன் செயல்முறை மிகவும் எளிதாக முடிவடைகிறது.