- Home
- Career
- மத்திய அரசுப் பணி: அடேங்கப்பா இத்தனை காலிப்பணியிடங்களா? எய்ம்ஸ்-ல் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
மத்திய அரசுப் பணி: அடேங்கப்பா இத்தனை காலிப்பணியிடங்களா? எய்ம்ஸ்-ல் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
எய்ம்ஸ் நிறுவனத்தில் 3501 மத்திய அரசு வேலைகள்! 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1,51,100 வரை. கடைசி தேதி ஜூலை 31, 2025.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மத்திய அரசுப் பணி!
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3501 காலியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன. இந்த மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12, 2025 முதல் ஜூலை 31, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பள விவரங்கள்
இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, எந்தப் பட்டப்படிப்பு, ANM, B.E/B.Tech, BPT, M.Sc, MCA, D.Pharm, DMLT, BMLT போன்ற பலவிதமான கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன. மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.1,51,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
விண்ணப்பக் கட்டணம் PWD பிரிவினருக்கு இல்லை. SC/ST/EWS பிரிவினர் ரூ.2,400/-ம், மற்றவர்கள் ரூ.3,000/-ம் செலுத்த வேண்டும். தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), குறிப்பிட்ட சில பதவிகளுக்கு திறன் தேர்வு (Skill Test) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) மூலம் நடைபெறும். தேர்வு தேதிகள் ஆகஸ்ட் 25, 2025 மற்றும் ஆகஸ்ட் 26, 2025 ஆகும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை
விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் [https://rrp.aiimsexams.ac.in/] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.