MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாணவர்கள் தலையில் இடி இறங்கப்போகிறதா? - மெட்ராஸ் பல்கலைக்கழக முடிவை எதிர்த்து கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

மாணவர்கள் தலையில் இடி இறங்கப்போகிறதா? - மெட்ராஸ் பல்கலைக்கழக முடிவை எதிர்த்து கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

Madras University ஓய்வூதியத்திற்காக கார்பஸ் ஃபண்டை எடுக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் முடிவு 'நம்பிக்கை துரோகம்' என SPCSS-TN கண்டனம். இதனால் மாணவர் கட்டணம் உயரும் அபாயம் மற்றும் NEP 2020 சர்ச்சை குறித்து முழுமையாகப் படியுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Dec 02 2025, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Madras University மாணவர்கள் தலையில் இடி இறங்கப்போகிறதா?
Image Credit : Gemini

Madras University மாணவர்கள் தலையில் இடி இறங்கப்போகிறதா?

சென்னை பல்கலைக்கழகம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க, தனது உயிர்நாடியான 'கார்பஸ் ஃபண்ட்' (Corpus Fund) நிதியை உடைக்க முடிவெடுத்தது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "இது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்" என்றும், "அரசின் பொறுப்பற்ற தனம்" என்றும் சமூகப் போராற்றத்திற்கான மாணவர், பெற்றோர் மற்றும் குடிமக்கள் கூட்டு இயக்கம் (SPCSS-TN) கடுமையாகச் சாடியுள்ளது.

அரசின் பிச்சை தேவையில்லையா?

இந்த விவகாரம் குறித்து SPCSS-TN பொதுச்செயலாளர் P.B. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை அனலைக் கக்கியுள்ளது. "சென்னை பல்கலைக்கழகம் அரசிடம் பிச்சை எதுவும் கேட்கவில்லை. ஆனால், சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, பல்கலைக்கழகத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைக்கும் துரோகச் செயல்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அரசு செய்ய வேண்டிய நிதியுதவியை மறுப்பது மற்றும் பல்கலைக்கழகத்தின் சேமிப்பைக் கரைப்பது, இறுதியில் யாரைப் பாதிக்கும் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

24
மாணவர்கள் தலையில் விழும் சுமை!
Image Credit : Gemini

மாணவர்கள் தலையில் விழும் சுமை!

"கார்பஸ் ஃபண்டை இப்போது எடுத்துவிட்டால், எதிர்காலத்தில் அதை எப்படி நிரப்பப் போகிறீர்கள்? பல்கலைக்கழகத்தின் மற்ற செலவுகளை யார் ஏற்பது?" என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ஒரே வழி, மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதுதான். ஏற்கனவே தேர்வுக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம் அதிகமாக உள்ளது. இனி வரும் காலத்தில் இது இன்னும் உயர்ந்தால், ஏழை எளிய மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? இது மறைமுகமாக மாணவர்களுக்கு வைக்கப்படும் செக் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Related Articles

Related image1
வாங்க பழகலாம்! அழைக்கிறது ஐஐடி மெட்ராஸ் :மாணவர்களே, பெற்றோர்களே! 2025 சேர்க்கைக்கு முன் வளாகப் பயணம் !
Related image2
"உடனே கிளம்பலாம்!" - போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ஆட்கள் தேவை! Madras University தந்த அரிய வாய்ப்பு!
34
கல்வி வியாபாரமாகிறதா?
Image Credit : our own

கல்வி வியாபாரமாகிறதா?

பல்கலைக்கழகத்தின் செலவுகளை மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தைக் கொண்டுதான் சமாளிக்க வேண்டும் என்றால், அது "பொது நிறுவனம்" (Public Institution) என்ற தகுதியை இழந்து, ஒரு வியாபார நிறுவனமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறார் கஜேந்திர பாபு.

"இதுதான் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) நோக்கம். 'காசு இருந்தால் படி' என்ற நிலையை உருவாக்கி, சமூக அநீதியை இழைப்பதே இதன் திட்டம்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

44
சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
Image Credit : our own

சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை மீறி, நியமன உறுப்பினர்கள் (Ex-officio members) முடிவுகளைத் திணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத் தன்மையை அழிக்கும் செயல் என்றும் கூறப்படுகிறது.

"மக்கள் வரிப்பணத்தில் உருவான நிறுவனங்களைக் காப்பது அரசின் கடமை. அரசு தவறும் பட்சத்தில், மக்கள் அதைத் தட்டிக் கேட்பார்கள்" என்று எச்சரிக்கையுடன் முடிகிறது அந்த அறிக்கை.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"படிக்கிறது ஒரு IIT-ல.. டிகிரி வாங்குறது வேறொரு IIT-ல!" - மத்திய அரசின் மாஸ் பிளான்!
Recommended image2
மாதம் ₹9,000 வரை உதவித்தொகை! மாணவர்களுக்கு லக்! - மத்திய பட்ஜெட்டில் ஒளிந்திருந்த அந்த 'ரகசிய' திட்டம்!
Recommended image3
"படிக்கிறது மட்டும் போதாது!" - பள்ளிகளுக்கு CBSE போட்ட புது கண்டிஷன் என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
வாங்க பழகலாம்! அழைக்கிறது ஐஐடி மெட்ராஸ் :மாணவர்களே, பெற்றோர்களே! 2025 சேர்க்கைக்கு முன் வளாகப் பயணம் !
Recommended image2
"உடனே கிளம்பலாம்!" - போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ஆட்கள் தேவை! Madras University தந்த அரிய வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved