- Home
- Career
- கல்லூரிகளில் ஆசிரியர் ஆக ஆசைப்பட்டவர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்': 2,708 காலிப்பணியிடங்கள்! உயர்கல்வித் துறை அதிரடி!
கல்லூரிகளில் ஆசிரியர் ஆக ஆசைப்பட்டவர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்': 2,708 காலிப்பணியிடங்கள்! உயர்கல்வித் துறை அதிரடி!
Assistant Professor Recruitment மாணவர்களின் நலன் கருதி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் காலியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் விரைவில் நியமனம்.

Assistant Professor Recruitment நிரந்தரப் பணியிடங்களுக்கு உத்தரவு!
உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத்தில் திகழ வேண்டும் என்ற முதலமைச்சரின் உயரிய நோக்கில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதியான எண்ணத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் வழிமுறை
மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிரப்பப்பட உள்ள இந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் நிரப்பப்படும்.
• இந்த நியமனப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மேற்கொள்ளும்.
• ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான முனைவர் பட்டதாரிகளுக்கும், NET/SET தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிரந்தர வேலைவாய்ப்பாகும்.
கல்லூரிகளில் புதிய அத்தியாயம் தொடக்கம்!
கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கியது, நடப்புக் கல்வி ஆண்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கியது, மற்றும் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியது போன்ற உயர்கல்வி மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு, தற்போது இந்த 2,708 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்புவது கூடுதல் பலம் சேர்க்கும். நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், வகுப்புகள் தடையின்றி நடப்பதுடன், கல்லூரிகளின் ஒட்டுமொத்த கல்வித்தரமும், நிர்வாகச் செயல்பாடுகளும் மெருகேறும் என்பது உறுதி.