- Home
- Business
- Elon vs Trump: நாடு கடத்தி தென்னாப்பிரிக்கா அனுப்புவேன்! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! எதற்கும் அசராத எலான்!
Elon vs Trump: நாடு கடத்தி தென்னாப்பிரிக்கா அனுப்புவேன்! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! எதற்கும் அசராத எலான்!
டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது. அரசின் எலக்ட்ரிக் வாகன ஊக்கத்தொகைகள் குறித்த கருத்து வேறுபாடு, தொழில்நுட்பம் மற்றும் அரசியல் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மோதிக்கொள்ளும் நண்பர்கள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவன நிறுவனர் எலான் மஸ்க், இருவரும் தொழில்நுட்ப உலகிலும், அரசியலிலும் பெரும் தாக்கம் கொண்டவர்கள். இப்போது இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது. இதில் ஒருவர் வாய் திறதால் கூட சர்வதேச சந்தைகள் ஊசாலாடுகிறது. ஆனால் இருவருமே மாறி மாறி பேசி வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
"தென் ஆப்ரிக்காவுக்கு அனுப்புவேன்"
இப்போது அமெரிக்காவில் செலவுகள் மிக அதிகமாகப் போய்க்கொண்டு இருக்கின்றன என்றும் வரி கட்டணம் குறைக்கப்பட வேண்டும் எனவும் கூறிய மஸ்க் இந்த நிலை தொடர்ந்தால், நான் புதிய அரசியல் கட்சி தொடங்க எண்ணுகிறேன்” என்று கூறினார். இதற்கு பதிலடியாக, டிரம்ப் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எலான், உன் டெஸ்லா நிறுவனத்தை மூடி, தென் ஆப்ரிக்காவுக்கு திரும்பிப் போக வேண்டிய நாள் வரும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
"செலவை குறைக்க முடிவு"
இதற்கு முன், டிரம்பும் மஸ்கும் நெருக்கமான உறவில் இருந்தனர். ஆனால் தற்போது அரசின் எலெக்ட்ரிக் வாகன ஊக்கத்தொகைகளை மஸ்க் ஆதரிப்பது, டிரம்புக்கு விருப்பம் இல்லை. டிரம்ப் இதை ஒரு பெரிய ஆபத்தாகப் பார்க்கிறார். அவரின் கருத்தில், அமெரிக்க பணம் வீணாக செலவழிக்கப்படுகிறது. மேலும் டிரம்ப் தன்னுடைய ட்ருத் சோசியல் இணையத்தில்,“இனி ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள் திட்டங்கள், எலெக்ட்ரிக் கார்கள் எந்த ஒன்றும் தேவையில்லை. அவற்றை நிறுத்திவிட்டால் நம் நாட்டுக்கு மிகப்பெரிய தொகை சேமிக்க முடியும்!” என்று கூறியுள்ளார்.
"தொழில்துறைகளுக்கு ஆதரவு தர வேண்டும்"
மஸ்க் இதற்கு பதிலளித்து, “நாம் வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்கு ஆதரவு தர வேண்டும். இத்தனை ஆண்டுகளாக நான் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க முயன்றதற்குப் பின்னே பெரும் சிரமங்கள் இருந்தது. இப்போது அரசு உதவி பெறுவது தவறு அல்ல” என்றார். இவர்கள் இருவரின் கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகமாகிறது. மஸ்க் தற்போது அரசியலிலும் தனக்கு இடம் பிடிக்க முயற்சி செய்வதாகவும் செய்திகள் வந்துள்ளன.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவலை
இருவரின் போராட்டம் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமல்ல. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிதி நிறுவங்கள், பங்கு வியாபாரிகள் இச்சம்பவத்தை கவலையுடன் பார்க்கின்றனர். இந்த ஊக்கத்தொகைகள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.
"வளர்ச்சியடைந்த தொழில்களை அழிக்க நினைக்கிறார்கள்"
ரிபப்ளிகன் செனட்டர்கள் கொண்டு வரும் சட்டங்கள், எங்கள் தொழில்களை மூட வைக்கும். வளர்ச்சியடைந்த தொழில்களை அழிக்க நினைக்கிறார்கள். இது ஆபத்து என்று மஸ்க் வலியுறுத்தினார். இந்த வாக்குவாதம் உண்மையில் எங்கு முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் தங்களுடைய ஆதரவாளர்களிடம் பெரும் தாக்கம் செலுத்தும் வகையில் பேசுகிறார்கள்.
எலெக்ட்ரிக் வாகனத் திட்டங்களுக்கு பாதிப்பு
ஒரு பக்கம், டிரம்ப் அமெரிக்க பணம் சேமிக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இன்னொரு பக்கம், மஸ்க் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார். மக்கள், தொழில் முதலீட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் – அனைவரும் இந்த விவகாரத்தையும் பதற்றத்துடன் கவனித்து வருகின்றனர். எது நடந்தாலும், இந்த நிகழ்வு எதிர்கால எலெக்ட்ரிக் வாகனத் திட்டங்களுக்கும், அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.