MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கூகுள் ஊழியர்களுக்கு வாரம் 60 மணிநேர வேலை! வெறித்தனமான AI திட்டம் ரெடி!

கூகுள் ஊழியர்களுக்கு வாரம் 60 மணிநேர வேலை! வெறித்தனமான AI திட்டம் ரெடி!

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ஜெமினி AI ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். AI போட்டியை வெல்லும் முனைப்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : SG Balan
| Updated : Mar 05 2025, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Google co founder Sergey Brin

Google co-founder Sergey Brin

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ஜெமினி AI மாடல்களில் பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் குறைந்தது 60 மணிநேரம் அலுவலகத்தில் இருக்குமாறு மெமோ அனுப்பியுள்ளார். கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் நிலையில், செர்ஜி பிரின் தனது ஊழியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Google Employees

Google Employees

கூகுளின் AI மாடலான ஜெமினியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வாரத்திற்கு 60 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். பிப்ரவரி 26ஆம் தேதி இந்த மெமோ அனுப்பப்பட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

38
Google AI Model

Google AI Model

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஊழியர்களை பிரின் விமர்சித்துள்ளார், "பலர் 60 மணிநேரத்திற்கும் குறைவாக வேலை செய்கிறார்கள்" என்றும் இவர்கள் மற்ற அனைவருக்கும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறார்கள் என்றும் பிரின் குறை கூறியுள்ளார். ஜெமினியில் பணிபுரியும் ஊழியர்கள் AI தொழில்நுட்பத்தில் உலகின் மிகவும் திறமையானவர்களாக விளங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

48
Google AI tools

Google AI tools

செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள போட்டியை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியிருப்பதன் அவசியத்தையும் பிரின்னின் எடுத்துக்காட்டியுள்ளார். கூகுள் AI தொழில்நுட்ப பாய்ச்சலை எவ்வாறு அடைய முடியும் என்றும் விளக்கியுள்ளார்.

58
Google investment in AGI

Google investment in AGI

"போட்டி மிகவும் வேகமாகிவிட்டது. AGI-க்கான இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது. இந்தப் போட்டியை வெல்வதற்கான அனைத்துப் பொருட்களும் நம்மிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் நாம் நமது முயற்சிகளை டர்போசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் ஊழியர்கள் கோடிங் எழுதுவதற்கு AI-ஐ அதிகமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். AI-யின் முன்னேற்றம் செயற்கை உற்பத்தி நுண்ணறிவுக்கு (AGI) வழிவகுக்கும் என்று செர்ஜி பிரின் கூறியுள்ளார்.

68
Working hours

Working hours

இந்தியாவில் உள்ள பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற முனைப்புடன் உள்ளன. இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த ஆண்டு வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இளம் தொழில் வல்லுநர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று வாதிட்டார். ஜனவரியில், லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி) தலைவர் எஸ்.என். சுப்ரமணியன், வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றார்.

78
Work Life Balance

Work Life Balance

இருப்பினும், நீண்ட நேரம் பணிபுரிய வேண்டும் என்று கூறும் சிஇஓக்களின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன.  வேலையில் அதிக நேரம் செலவிடும்போது தவறுகள் அதிகரிப்பதற்கும் வேலையில் உள்ள ஆர்வம் குறைவதற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

88
Capgemini

Capgemini

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசிய கேப்ஜெமினி நிறுவனத்தின் இந்தியாவுக்கான சி.இ.ஓ. அஷ்வின் யார்டி, வாரத்திற்கு சுமார் 47.5 மணிநேரம் வேலை நேரத்தைப் பின்பற்றுவது சிறப்பானதாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். மற்றவர்கள் 60 முதல் 90 மணிநேர வேலை நேரத்தைப் பரிந்துரைத்த நிலையில், அஷ்வின் மிகவும் குறைவான நேரத்தைப் பரிந்துரை செய்துள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கூகிள் ஊழியர்கள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
ரூ.50 லட்சம் காப்பீடு: 18 முதல் 65 வயது வரை; எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்!
Recommended image3
Astrology: ஜோசியம் பார்த்து ரூ.1800 கோடி வருமானம்.! உண்மையில் கோடீஸ்வர யோகம் இதுதான்.! யாருக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved