இந்திய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் எங்கே அச்சிடப்படுகிறது? நிர்வாகிப்பது யார்?
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசுயும் இணைந்து வெளியிடுகின்றன. ரூபாய் நோட்டு வடிவமைப்பை மாற்றும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது, ஆனால் அரசின் ஒப்புதல் தேவை. நாணயங்கள் விநியோகிப்பதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படுகின்றன.

cash 0
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசுயும் இணைந்து வெளியிடுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு ரூபாய் நோட்டு தொடர்பான விவகாரங்களை கவனிக்கிறது. நாணயங்கள் பற்றிய விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு அரசிடம் உள்ளது.
ரூபாய் நோட்டு வடிவமைப்பை மாற்றும் அதிகாரமும் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. ஆனால், எந்த ரூபாய் நோட்டின் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்றாலும் ரிசர்வ் வங்கி மத்தியக் குழுவும் மத்திய அரசும் ஒப்புதல் அளிகக வேண்டும். ஆனால், நாணயங்களின் வடிவமைப்பை மத்திய அரரே தீர்மானிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் பிரிவு 22 இதுபற்றிய ஷரத்துகளைக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை முதலில் ஆர்பிஐ உருவாக்கும். அது ஆர்பிஐ மத்திய குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். குழுவின் ஒப்புதல் பெற்று, இறுதி ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இந்திய நாணய சட்டம் 2011 இன் கீழ் நாணயங்களை இந்திய அரசே நிர்வகிக்கிறது. அரசு வெளியிடும் நாணயங்கள் விநியோகிப்பதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படுகின்றன.
கள்ள நோட்டுகளின் புழக்கத்தையும் ரிசர்வ் வங்கியின் மேலாண்மை துறை கவனிக்கிறது. ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விநியோகித்தல், மாற்றிக்கொடுத்தல், சேதமடைந்த நோட்டுகளை அப்புறப்படுத்துதல், ரூபாய் நோட்டுகளைச் சேமிப்பதற்கான இடத்தேவையை கண்காணித்தல், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றையும் இந்தத் துறை கவனித்துக்கொள்கிறது.
ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு இடங்களில் அச்சிடப்படுகின்றன. நாசிக், தேவாஸ் (மத்திய பிரதேசம்), மைசூர் (கர்நாடகா), சல்போனி (மேற்கு வங்கம்) ஆகிய நகரங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. நாணயங்கள் மும்பை (மகாராஷ்டிரா), அலிபூர் (கொல்கத்தா), சைபாபாத் (ஹைதராபாத்), நொய்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன.